நடிப்புத்துறை:
முதல் படமான கானல் நீரில் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்தார். அப்படத்தின் தயாரிப்புப்பணிகளிலும் உதவிபுரிந்தார். அந்தப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஜே.கே.ரித்தீஷ் முத்திரை பதித்தார்.
அடுத்த படமான நாயகன் திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் தனிமுத்திரை பதிதார். அந்தப்படம் வெளியான புதிதில் நல்ல வசூல் மழை பெய்தது. இந்தப்படத்தில்தான் ரித்தீஷுக்கு "வீரத்தளபதி" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. படம் ஆரம்பத்தில் "வீரத்தளபதி" ஜே.கே.ரித்தீஷ் என்று பெயர் போடும்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. இந்தப்படத்திற்கு பிறகுதான் இவரின் ரசிகர் வட்டம் உலகஅளவில் பெருகியது. அறிமுகப்பாடலில் பலவித வேடங்களில் நடனமாடி உலனாயகன் நடித்த தசாவதாரத்திகே போட்டியாக இருந்தது. அவரது ரசிகர்கள் http://www.jkritheesh.com/என்ற இணையதளத்தை ஆரம்பித்தனர். தற்போதைய நிலையில் கைவசம் நாலு திரைப்படங்களில் நடிக்கும் ஒரே இந்திய நடிகர் இவர்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த புகழ்பெற்ற படங்களின் பெயரில் நடிக்கிறார்.


வரவிருக்கும் படங்கள்:
இயக்குனர் பேரரசுவின் சகோதரர் முத்துவடுகு திருப்பாச்சி படத்தில் இருந்து திருவண்ணாமலை படம் வரை அவருக்கு உதவியாக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாக முத்துவடுகு தனியாக ஒரு படத்தை இயக்கப்போவதாக திரையுலகில் பேசப்பட்டது. நாயகன் வெற்றியை தொடர்ந்து தனது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஜே.கே.ரிதீஷிடம் கேட்டுக்கொண்டார். இயக்குனரிடம் கதையைக்கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ். இந்தப்படம் ரிதீஷுக்கே உரிய அதிரடி கமர்சியல் படமாக இருக்கும். படத்திக்கு "தளபதி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்ததாக சித்திக் இயக்கத்தில் "தில்லுமுல்லு" என்ற படத்தில் நடிக்கிறார்.


அடுத்ததாக "வேட்டைபுலி" என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பற்றி வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் கூறியதாவது :
" முதலில் வேட்டைக்காரன் என்று பெயர் சூட்ட எண்ணியிருந்தோம். ஆனால் அந்தப்பெயரை இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்தபடத்திர்க்கு பதிவு செய்துவிட்டதால், பாயும் புலி என்று பெயர் வைக்கலாம் என ஏவிஎம் நிவாகத்தை அணுகினோம். அனுமதி கிடைக்கவில்லை. எனவே இரண்டு பெயர்களையும் சேர்த்து வேட்டைபுலி என்று வைத்துவிட்டோம். இப்படத்தை பாவா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நாயகன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர்களை திருப்திபடுத்துவதாகவும் அதிரடிப்படமாகவும் அமையும்.
அடுத்ததாக மீண்டும் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் "தெய்வமகன்" என்ற படத்தில் நடிக்கிறார்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் நடித்த திரைப்படம் ""அங்குசம்"" என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
இவருக்கு ஆந்திராவிலும் பெரிய ரசிகர்கூட்டம் இருக்கிறது.
அரசியல் & சமூக சேவை
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் தாத்தா தமிழக குடிசைமாற்று துறை அமைச்சர் சுப.தங்கவேலன் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க . செயலாளராக பதவி வகிக்கிறார். ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம் click
ஜே.கே.ரித்தீஷின் புகைப்படங்கள் click
ஜே.கே.ரித்தீஷ் அதிகாரப்பூர்வ இணையதளம் click
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!
வீரத்தளபதி J.K.Ritheesh வாழ்க! வாழ்க! வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!
