Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, January 03, 2009

நாமும் எம்.பி ஆகலாம் போல இருக்கு



நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கிறது என்று தெரிந்தால் நமக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வரும்.

எம்.பிகளுக்கு மாதச்சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் சலுகைகளின் பட்டியல் மிக நீளம்.

ஒரு எம்.பியின் அலுவலக செலவுக்காக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் 4 ஆயிரம் ரூபாய், எழுத்து பொருள் செலவுக்காக, 2 ஆயிரம் ரூபாய் தபால் செலவுகளுக்காக. எம்.பி ஒருவர் தனது பணிகளுக்காக உதவியாளரை நியமித்துக்கொண்டோல் அவருக்குக் சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வரை லோக்சபா, ராஜ்யசபா செயலகம் அளிக்கும்.

நாடளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது தினசரி அலவன்சாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்.பி., தனது மனைவி அல்லது கணவர், எப்போதும் நாட்டின் எந்தப்பகுதிக்கும் ரயிலில் முதல் வகுப்பில் (First Class)இலவசமாக பயணம் செய்யலாம்.

ஒவ்வொரு எம்.பியும் 34 ஒருவழிதட(One Way) விமானப்பயனகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.
இந்தியாயவின் எந்தப்பகுதிக்கும் உடன் மனைவி அல்லது உறவினர்கள், தெரிந்தவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம்.


ஒரு எம்.பியின் மனைவி அல்லது கணவர் அல்லது உறவினர் அவரைப் பார்ப்பதற்கு(per Year)
8 முறை இலவசமாக விமானத்தில் பறக்கலாம். இந்த அனுமதி, எம்.பிக்கான விமான பயண அனுமதியில் சேர்க்கப்படும்.

எம்.பி., ஒவ்வொருவருக்கும் 3 இலவச தொலைப்பேசி இணைப்புகளும்(3 land line phone connection), ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இலவச அழைப்புகளுக்கான அனுமதியுடன் செல்போன் இணைப்பும் வழங்கப்படும்(1,50.000 free calls in cellphone). மாதந்தோறும் ஆயிரத்து500 ரூபாய் அளவுக்கு இணையத்தையும் (free internet connection worth Rs. 1,500)இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாடாளுமன்ற உறுபினருக்கு டெல்லியின் இதயப்பகுதியில் வசிப்பிடம்(Heart of the City) ஒதுக்கப்படும். அது எம்.பியின் சீனியாரிடியைபொறுத்து பங்களாவாகவோ, இரட்டை மாடிக்குடியிருப்பு அல்லது விடுதியாகவோ இருக்கும். அதெற்கென குறைவான உரிமத்தொகை(Lease amount or Rent) எம்.பியின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரமும், 4 ஆயிரம் கிலோலிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படும். நாடளுமன்ற உறுபினராக இருந்தவருக்கு ஓய்வூதியமாக(Pension) மாதம் ரூ. 8 ஆதிரம் வழங்கப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் எம்.பியாக இருந்தால் அவருக்கு கூடுதலான(increment) ஒவ்வொரு ஆடுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.800 வீதம் கூடுதலாக கணக்கிட்டு அளிக்கப்படும். ஒரு முன்னாள் எம்.பி. தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் ரலில் (First Class AC )முதல்வகுப்பு குளிர்சாதானப்பெட்டியில் பயணம் செய்யலாம்.

இது தவிர, கேபினெட் அமைச்சர்களாகவும்,கேபினெட் இணை அமைச்சர்களாகவும்
இருப்பவர்களுக்கு இன்னும் ஏராளமான அவர்களது துறை சார்ந்த சலுகைகள் கிடைக்கும்.

இவ்வளவையும் அனுபவித்து தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்படும் எம்.பி நிதியையும் சரியாக தம் தொகுதி வளர்ச்சிக்கு செலவழிக்காமல் வைத்துருக்கிறார்கள்.

இவ்வளவு சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிற எம்.பிக்களை பார்க்கும்போது நம்மளுக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வருகிறதுதானே!

சில எம்.பிகளுக்கு மட்டும் கீழே ------>
குறிப்பு: எம்.பிக்கள் லஞ்சமாக வாங்கும் பணம் மற்றும் பல்வேறு திட்டங்களில் கமிசனாக அடிக்கும் பணம் இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு எம்.பிக்கும் மாறுபடும். (Ex. ராஜா - ஸ்பெக்தரம் 40,000 கோடி , லாலு பிரசாத் - 950 கோடி மற்றும் பல.)


நன்றி - Parliament of India

Tuesday, December 30, 2008

அரசியல்வாதிகள் எப்படி உருவாக வேண்டும்.


அரசியல் என்பது ஒரு நல்ல வார்த்தைதான். அரசியலில் நல்ல மனிதர்கள் , பொதுநலவாதிகள் இருக்கும் வரை அது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய நாகரிகமற்ற அரசியல்வாதிகளால் , மக்களுக்கு அரசியல் என்றாலே அருவருக்க வைக்கும் வார்த்தையாக உள்ளது. தங்கள் அலுவுலகங்கள் , பணிசெய்யும் இடங்கள் போன்றவற்றில் எல்லாம் ஒருவர் உயர் பதவி பெற்றால், அரசியல் செய்து பதவியை பெற்றுவிட்டான் என்று சொல்லுகிறார்கள். அந்த அளவிற்கு அரசியல் என்ற வார்த்தை தரம் கெட்டு போய்விட்டது, எதனால் என்று கேட்டால் சில தவறான அரசியல் வாதிகளால்.

எதனால் இந்த தவறான அரசியல்வாதிகள் உருவாகுகிறார்கள் என்று பார்த்தால் , லட்சியத்திற்காகவும் , உரிமைக்காகவும் மற்றும் பொதுநலனிர்க்காகவும் போராடும் அல்லது பாடு படும் அரசியல் வாதிகள் இல்லாததுதான் காரணம். அப்படியே அவர்கள் தோன்றினாலும் சில காலத்துக்குள் தங்களுக்கு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய அரசியல் கட்சிகளிடம் விலை போய்விடுகிறார்கள். அல்லது இவன் வளர்ந்துவிட்டால் பெயர் வங்கிவிடுவானோ என்ற காரணத்திற்காக மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் மீது அவதூறுகளை பரப்பி மற்றும் பொய்யான வழக்குகளை புனைந்து , மக்களிடம் நல்ல அரசியல்வாதிகளின் கருத்துகள் சென்று விடாமல் மட்டம் தட்டிவிடுகிறார்கள்.

இவைகளுக்கு எல்லாம் காரணம் என்று பார்த்தால் , நம்மை ஆளுகின்ற அரசியல்வாதிகளும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையான கருத்துகளை சொல்பவர்களும் , உரிமைக்காகவும் போராடுபவர்களும் தண்டிக்கபடுகிறார்கள் , எதனால் என்று பார்த்தால் ஆட்சி செய்பவர்களுக்கு உண்மை பிடிப்பது இல்லை. நம்மை ஆளுபவர்கள் கொள்ளை அடிப்பவர்களும் , சுயநலவாதிகலாகவும் மற்ற எதையும் பற்றி சிந்திக்காதவர்கவும் , தங்களின் பதவி சுகத்திற்க்காக இன உணர்வு , மானம் , இலட்சியம் எல்லாத்தையும் இழக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.ஒரு சாதரண வேலைக்கு ஆள் தேர்ந்து எடுக்கும் போது அவர்களின் படிப்பு என்ன , அவர்களின் குடும்ப பின்னணி என்ன அவர்கள் மீது ஏதும் வழக்கு இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டை ஆளப்போகிற , உயர் அமைச்சர் பதவிகளில் இருக்கும் போகும் அரசியல் வாதிகளுக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லை. தங்களின் சாதி செல்வாக்கை வைத்து , பண செல்வாக்கை வைத்து, ஊடகங்களின் மூலமாக மக்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து அல்லது தங்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை வைத்து எதாவது ஒரு அரசியல் கட்ச்சியில் சேருகிறார்கள் அல்லது ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிக்கு வரும் பொழுது இவர்களிடம் நாம் ஆக்கபூர்வமான செயல்களை எதிர்பார்க்க முடியாது.
எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகளிடம் நாம் உண்மை , நேர்மை லட்சியம் என்று பேசினால் அவர்களுக்கு புரியாது. அமைச்சர்களாக இருப்பவர்களின் பின்னணிகளை பார்த்தால் அவர்கள் தலைமை வகிக்கின்ற துறைக்கும் எந்த விதமான சமந்தமும் இருக்காது, கல்வி தகுதியும் இருக்காது பிறகு எப்படி இவர்களிடம் நாம் ஒழுங்கான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். அரசியல் வாதிகளுக்கு அல்லது அமைச்சர்களுக்கு எதாவது குறைந்த பட்ச கல்வித்தகுதியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இதற்க்கு முன்னால் ஒரு சில படிக்காத மேதைகள் அமைச்சர்களாக இருந்ததை மேற்க்கோள் காட்டி சாக்கு போக்கு சொல்வார்கள்.

ஒரு அரசியல்வாதி எப்படி உருவாக வேண்டும் என்று பார்த்ததால் அனுபவத்தின் மூலமாகத்தான் வரவேண்டும் . தான் சந்திக்கும் பிரச்சனை , ஒரு சமுதாயம் சந்திக்கும் பிரச்சனை அல்லது ஒரு பிரிவினர் சந்திக்கும் பிரச்சனை, ஒரு இனம் சந்திக்கும் பிரச்சனை, செல்லுகின்ற இடங்களில் எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்கள் , நாட்டிற்க்கு எதிராக நடக்கும் செயல்கள் , ஒரு சாதரண குடிமகன் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் , சிறுபான்மை மக்கள் ஆதிக்க சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் பார்த்து ஒரு மனிதனின் மனது துடித்து இவர்களுக்காக சாதிக்க வேண்டும் என்று துடித்து ஒருவன் எழுகின்றானோ, அவனிடம் இருந்துதான் உண்மையான ஆக்கபூர்வமான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். நல்ல செயல்கள் செய்யும் பொழுது பயங்கர எதிர்ப்புகள் பிரச்னைகள் வரத்தான் செய்யும் அவைகளை எல்லாம் தாண்டித்தான் வரவேண்டும்.ஒரு நேர்மையான அரசியல்வாதி தன்னுடைய கருத்துகளை , தன்னுடைய உணர்வுகளை சொல்லும் பொழுது மக்கள் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் , மக்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் இலட்சிய வாதிகளை தலைவர்களாகவும் , நேர்மையானவர்களை அமைச்சர்களாகவும் அடையமுடியும். நாமும் நம் நாடும் செழித்து வாழ முடியும்.


நன்றி - மக்களை தேடி - Dominic Panneer Selvam
இவர் ஒரு நல்ல எழுத்தாளர் அவசியம் பதிவுகளை படிக்கவும்
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009