Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Saturday, March 21, 2009

Arundhati film review - அருந்ததீ - திரைவிமர்சனம்



உண்மைத்தமிழனின் அருந்ததீ திரைவிமர்சனம்

கேபிள் சங்கரின் அருந்ததீ - திரைவிமர்சனம்

அருந்ததீ பட முழு விவரம் - தமிழ்

அனுஷ்கா பற்றிய வாழ்க்கைக்குறிப்பு

அனுஷ்கா அட்டகாசமான புகைப்படங்கள்

அருந்ததீ பட முழு விவரம் - தெலுங்கு


Tuesday, March 03, 2009

Thee - Movie Review தீ – திரைவிமர்சனம்



சென்னைக்கு வரும் ஹீரோ, ஒண்டி ஆளாக நின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்கடிப்பதுதான் கதை! கதை புதுசு. காட்சிகள் பழசு என்பதால் கடுப்பும், கைத்தட்டல்களுமாக கலப்பட ரசனைக்குள்ளாக்குகிறார் இயக்குனர் கிச்சா.

ஆரம்ப காட்சியில் சென்சார் கொஞ்சம் அசந்திருந்தாலும் ரசிகர்களுக்கு முடி கயிறு வைத்தியம் அவசியப்பட்டிருக்கும். நல்லவேளை... நிர்வாண கோலத்தில் ஓங்கு தாங்காக நடந்து வரும் சுந்தர்சி க்கு ஒரு கட்சி பேனரை இடுப்பில் கட்டி காப்பாற்றுகிறார் தலைவாசல் விஜய். பின்பு அதே கட்சியில் எம்.எல்.ஏ ஆகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்கிறார் சுந்தர்சி.

பிரபல அரசியல் தலைவனிடம் திட்டம் போட்டு தஞ்சமடையும் இவர், அவர்களை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ். ஏன் என்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் ஒரு பிளாஷ்பேக். அநேக படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும், பின்னாளில் ஹீரோவின் அழிச்சாட்டியங்களுக்கு சப்பை கட்டு கட்டுகிறது இந்த பகுதி. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு 'ரிவார்டு' கிடைக்கிறதோ இல்லையோ, 'ரிவிட்' உண்டு என்பதை கலங்கடிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பிளாஷ்பேக்கில் இன்ஸ்பெக்டர் சாமியாக அவதாரம் எடுத்திருக்கிறார் சுந்தர்சி. இவரால் பாதிக்கப்படுகிற எம்.எல்.ஏக்களை லாக்கப்பில் தள்ளுகிறார். 'ஏய் நான் யாரு தெரியுமா' என்று நெஞ்சை நிமிர்த்துபவர்களுக்கு இவர் கொடுக்கிற சூடு ஒவ்வொன்றும் பெட்ரோல் குண்டு! தனது உயர் அதிகாரியையே லாக்கப்பில் தள்ளும் சுந்தர்சி யின் வீரத்திற்கு கைதட்டல்கள் நிச்சயம் உண்டு.

இரண்டாம் பாதியில் இவருக்கு ஜோடி நமீதா. அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கும் நடிகை வேடம். நமீதாவை நடுவில் நிற்க வைத்துவிட்டு நாலு புறமும் நின்று கண்காட்சி நடத்தியிருகிறது கேமிரா. நமீதா-சுந்தர்சி மசாஜ் காட்சிகள் 'கெட்டக்கல்' ஆர்ய வைத்திய சாலை! சில காட்சிகளில் புடவை கட்டியும் இருக்கிறார். கண் 'கொள்ளாக்' காட்சி!

நியாயமான போலீஸ் அதிகாரியாக மனோஜ் கே ஜெயன். இவரது பதவிக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த சுந்தர்சி செய்கிற காரியங்கள் பரபரப்பு என்றால், வீறு கொண்டு எழும் காவல் துறையினர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேலை நிறுத்தம் செய்து ஸ்தம்பிக்க வைப்பது அதிர்ச்சி. போலீஸ் இல்லையென்றால் நாடு என்னாகும் என்பதற்கு இன்னும் உருப்பாடியாக சீன்களை யோசித்திருக்கலாமே கிச்சா?

உடம்பில் எந்தெந்த பகுதிகளில் கத்தியால் குத்துபட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை விவரமாக அறிந்து கொண்டபின், குத்துப்பட்டு ரத்தம் கக்கும் சுந்தர்சி அதுபோல இன்னும் சில காட்சிகளில் கலக்குகிறார்.

சுமார் ஒரு டஜன் வில்லன்கள் இருந்தும், மாறாத ஆக்ரோஷம்! தேறாத சவடால்கள்!

அவ்வளவு நெருக்கமான எதிரி, யூனிபார்மை கழற்றிவிட்டு வந்தால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா, அவனையே எம்எல்ஏ ஆக்குகிறார்களே? லாஜிக்கிற்கும் சேர்த்து தீ மூட்டியிருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'கா கா கா' ரீமிக்ஸ் துள்ளல். (படமாக்கிய விதம்தான் அல்லல்)

தீ- பட்டால் என்னாகுமோ அதுதான் நடக்கிறது வெளியே வரும்போதும்!


கேபிள் சங்கரின் தீ – திரைவிமர்சனம்

Thursday, January 22, 2009

தமிழர் ரசனை மீது ‘அவ்வளவு’ நம்பிக்கை!


நன்றி - என்வழி.காம்

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது ஏ….க நம்பிக்கை சினிமாக்காரர்களுக்கு… இல்லாவிட்டால் தைப் பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டுமாய் இப்படி கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள்.

அஆஇஈ என்ற படத்தையும் சேர்த்து கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் பொங்கல் கணக்கு நான்கு படங்கள்.

இவற்றில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தைத் தவிர மற்ற மூன்றும் குறைந்தபட்சம் திட்டி விமர்சனம் எழுதக்கூட அருகதையற்ற படங்கள்.

வில்லு! கொல்லு!
ரஜினி அல்லது எம்ஜிஆர் என்ற முகமூடி இல்லாமல் தன்னால் திரையில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்ற அபார தன்னம்பிக்கையை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் வில்லு படத்தில் விஜய்.

என்ன தைரியத்தில் இந்தப் படத்தை ‘இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்டு படம்’ என்று பீற்றிக் கொண்டார்களோ.. புரியவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை முன்னபின்ன பார்த்திருக்கீங்களா விஜய்?

இதையெல்லாம் பிராஸ்னனோ… டேனியல் க்ரெய்க்கோ கேள்விப்பட்டால் சொன்னவங்களை டம்மி துப்பாக்கியாலேயே சுட்டுக் ‘கொன்னு’டுவாங்க!!
வேண்டாம் தனுஷ்…
படிக்காதவன் என்ற தலைப்பு ஒவ்வொரு ரஜினி ரசிகனின் நெஞ்சிலும் பச்சைக் குத்தப்பட்டது போல அத்தனைப் பசுமையான ஒன்று. அந்தப் படத்தை 400 முறை பார்த்து தினத்தந்தியில் சாதனைச் செய்தியாக மாற்றிய இரு கோவை ரசிகர்களைப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா.

தனுஷ் இப்போது செய்துள்ள காரியம் அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவதற்குச் சமமானது!

ரஜினியின் படப் பெயர்கள் தனுஷுக்கே ஏகபோகச் சொத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் யாருக்கும் வருத்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்தத் தலைப்புகளுக்கு சின்ன மரியாதை வருமளவுக்கு கதையுள்ள படங்களாக நடித்தால் நல்லது. காரணம், படிக்காதவன் என்ற அந்த தலைப்புக்காகவே போய் படம் பார்த்துவிட்டு தலையிலடித்தபடி வெளியில் வரும் பல ரசிகர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது!!

‘அதெல்லாம் முடியாது… நான் எப்போதும் ‘சுள்ளான்’தான், மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றால், தயவு செய்து எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை தனுஷ் மட்டுமல்ல… வேறு யாருமே வைக்க முயற்சிக்காதீர்கள் (ஜானி, இளமை ஊஞ்சலாடுகிறது, ரங்கா, முத்து போன்ற தலைப்புகள் இப்போது இவர் வசம்தான் உள்ளன என்கிறது தயாரிப்பாளர் சங்கம்!).

இந்த புதிய படிக்காதவன் படத்தின் இன்னொரு கொடுமை விவேக் என்ற வக்கிரம் பிடித்த அரைகுறை. பேசாமல் ரிட்டயர் ஆகிவிடுங்கள் விவேக்… தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்!

திரைத்துறையில் சன் டிவி போன்று சர்வாதிகாரிகளை வளரவிடுவது எத்தகைய ஆபத்து என்பதற்கு காதல்னா சும்மா இல்லை என்ற ஓரளவு நல்ல படம் வந்ததே தெரியாமல் அமுங்கிப் போனதே சான்று.
ஆஸ்கர் பரிந்துரை கமிட்டி வரை போன கம்மியம் என்ற தெலுங்குப் படத்தை குறைந்தபட்ச நேர்மையுடன் ரீமேக் செய்திருந்தார்கள். ஆனால் வெறும் சப்தங்களுக்கு மத்தியில் ஒரு சங்கீதம் எடுபடாமல் போன மாதிரியாகிவிட்டது, ராஜ் டிவிக்காரர்களின் இந்த நேர்மையான முயற்சி.

ஏஎம் ரத்னம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும், இந்தப் படத்தில் தன் மகனுக்கு தேவையற்ற பில்டப் எதுவும் கொடுக்காமல் அவரை சாதாரண கேரக்டராக வரவைத்திருந்தார்.

ஆனால் கொடுமை பாருங்கள்… சென்னையை விட்டால் அடுத்த 100 கிமீ தூரத்துக்கு வேறு தியேட்டரில் ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தையே பார்க்க முடியவில்லை. அந்தளவு தியேட்டர் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் இந்தப் படத்துக்கு.

இவர்களின் அசுர பலத்துக்கு முன்னால் யார் என்ன செய்துவிட முடியும்?

அஆஇஈ… ஏவிஎம் என்ற காலிப் பெருங்காய டப்பா(பிராஞ்ச் -2)விலிருந்து வந்துள்ள படம்… அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லை!

ஆக இந்தப் பொங்கல், அரசியல் தொடங்கி சினிமா வரையில் தமிழனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதாகவே வந்து போனது!

Thursday, December 11, 2008

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்


முதல் படத்திலேயே முத்திரை பதித்த அண்ணன் R.Kஅவர்களுக்கு பாராட்டுக்கள்
R.K அவர்கள் வக்கீலாக நடித்திருக்கிறார். பல பெரிய, (இடியாப்ப)சிக்கலான வழக்குகளை கூட ரொம்ப ஈஸியாக(அதுவும் உண்மையான குற்றவாளிகள் சார்பில்) வாதாடி வெற்றி பெற்று, அதன்பிறகு அவர்களை கொலை செய்வதுதான் R.K ஸ்டைல். குற்றவாளிக்காக கோர்ட்டில் வாதாதி விடுதலை செய்யும் போதும், கொலை செய்து முடித்தவுடன் "எல்லாம் அவன் செயல்" என்று ப்ஞ்ச் டயலாக் வேறு!...
படம் ஆரம்பத்தில் மிகசுருக்கமான வசனங்கள் ம்ட்டுமே பேசிக்கொள்கிறார்கள்(மணிரத்னம் படம் மாதிரி இல்லை!!!!) கேரளாவில் நடந்த கல்லூரி ஆசிரியை கொலை மற்றும் வடைந்தியாவில் நடந்த தந்தை தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஆகியவ்ற்றில் உண்மை குற்றவாளிகளுக்கு விதுதலை வாங்கிக்கொடுத்து அவர்களை கொலை செய்துவிட்டு அடுத்த வழக்காக திருச்சி நாவரசு கொலை வழக்கை போன்ற ஒன்பது மருத்துவக்கல்லூரி மாணவிகளின் ராகிங் கொடுமையால் இறக்கும் முதலாம் ஆண்டு மாணவியின் கொலை வழக்கை கையில் எடுத்து அந்த ஒன்பது பேரையும் எப்படி காப்பாற்றப்போகிறார் என்பதே மீதிக்கதை!
போலீஸ் தயாரித்த குற்றப்பத்திரிக்கையை வைத்தே வழக்கைப்பற்றி தெரிந்து கொள்கிறார் வக்கீல் எல்.கே லஷ்மன் கிருஷ்னா (படத்தில் நம்ம ஆர்.கே பேரு இதுதான்) அதேபோல் L.K ககு Explanation வேறு கொடுக்கிறாரு License to Killன்னு!!!!!!
ஆனால் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வசனத்தை பேசி நடிக்காமல் வசனத்தை படிக்கிறார்கள். படத்தில் ஒரேயொரு ஆறுதல் வடிவேலு காமெடி.
இயக்குனர் ஷாஜி கைலாஷ் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கடைசியில் எதிர்பாராத திருப்பத்தை கொடுத்துள்ளார். மணிவண்ணன், ரகுவரன், சுகன்யா, நாசர், விசு, விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், சங்கிலி முருகன் என பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
என்க்கென்னவோ R.K அவர்கள்வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ்க்கு போட்டியாக வருவார் எனத் தோன்றுகிறது.
இந்த மாதிரி வக்கீல்கள் இந்திய நாட்டில் இருந்தால் மனிதக்கொலை செய்யும் தீவிரவாதிகளும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் உயிரோடு இருக்கமாட்டார்கள். அந்த காலம் எப்ப வருமோ?


ஆக மொத்தத்தில் படத்தை ஒரு தடவை பார்க்கலாம்.



பின்குறிப்பு: படத்தை பார்த்துவிட்டு மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்....

கண்டிப்பா தமிழீஸ்ல ஓட்டு போடனும்.... இல்லேனா ஆர்.கே அண்ணகிட்ட சொல்லிடுவேன்!
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009