Showing posts with label வில்லு. Show all posts
Showing posts with label வில்லு. Show all posts

Thursday, January 22, 2009

தமிழர் ரசனை மீது ‘அவ்வளவு’ நம்பிக்கை!


நன்றி - என்வழி.காம்

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது ஏ….க நம்பிக்கை சினிமாக்காரர்களுக்கு… இல்லாவிட்டால் தைப் பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டுமாய் இப்படி கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள்.

அஆஇஈ என்ற படத்தையும் சேர்த்து கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் பொங்கல் கணக்கு நான்கு படங்கள்.

இவற்றில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தைத் தவிர மற்ற மூன்றும் குறைந்தபட்சம் திட்டி விமர்சனம் எழுதக்கூட அருகதையற்ற படங்கள்.

வில்லு! கொல்லு!
ரஜினி அல்லது எம்ஜிஆர் என்ற முகமூடி இல்லாமல் தன்னால் திரையில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்ற அபார தன்னம்பிக்கையை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் வில்லு படத்தில் விஜய்.

என்ன தைரியத்தில் இந்தப் படத்தை ‘இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்டு படம்’ என்று பீற்றிக் கொண்டார்களோ.. புரியவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை முன்னபின்ன பார்த்திருக்கீங்களா விஜய்?

இதையெல்லாம் பிராஸ்னனோ… டேனியல் க்ரெய்க்கோ கேள்விப்பட்டால் சொன்னவங்களை டம்மி துப்பாக்கியாலேயே சுட்டுக் ‘கொன்னு’டுவாங்க!!
வேண்டாம் தனுஷ்…
படிக்காதவன் என்ற தலைப்பு ஒவ்வொரு ரஜினி ரசிகனின் நெஞ்சிலும் பச்சைக் குத்தப்பட்டது போல அத்தனைப் பசுமையான ஒன்று. அந்தப் படத்தை 400 முறை பார்த்து தினத்தந்தியில் சாதனைச் செய்தியாக மாற்றிய இரு கோவை ரசிகர்களைப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா.

தனுஷ் இப்போது செய்துள்ள காரியம் அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவதற்குச் சமமானது!

ரஜினியின் படப் பெயர்கள் தனுஷுக்கே ஏகபோகச் சொத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் யாருக்கும் வருத்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்தத் தலைப்புகளுக்கு சின்ன மரியாதை வருமளவுக்கு கதையுள்ள படங்களாக நடித்தால் நல்லது. காரணம், படிக்காதவன் என்ற அந்த தலைப்புக்காகவே போய் படம் பார்த்துவிட்டு தலையிலடித்தபடி வெளியில் வரும் பல ரசிகர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது!!

‘அதெல்லாம் முடியாது… நான் எப்போதும் ‘சுள்ளான்’தான், மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றால், தயவு செய்து எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை தனுஷ் மட்டுமல்ல… வேறு யாருமே வைக்க முயற்சிக்காதீர்கள் (ஜானி, இளமை ஊஞ்சலாடுகிறது, ரங்கா, முத்து போன்ற தலைப்புகள் இப்போது இவர் வசம்தான் உள்ளன என்கிறது தயாரிப்பாளர் சங்கம்!).

இந்த புதிய படிக்காதவன் படத்தின் இன்னொரு கொடுமை விவேக் என்ற வக்கிரம் பிடித்த அரைகுறை. பேசாமல் ரிட்டயர் ஆகிவிடுங்கள் விவேக்… தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்!

திரைத்துறையில் சன் டிவி போன்று சர்வாதிகாரிகளை வளரவிடுவது எத்தகைய ஆபத்து என்பதற்கு காதல்னா சும்மா இல்லை என்ற ஓரளவு நல்ல படம் வந்ததே தெரியாமல் அமுங்கிப் போனதே சான்று.
ஆஸ்கர் பரிந்துரை கமிட்டி வரை போன கம்மியம் என்ற தெலுங்குப் படத்தை குறைந்தபட்ச நேர்மையுடன் ரீமேக் செய்திருந்தார்கள். ஆனால் வெறும் சப்தங்களுக்கு மத்தியில் ஒரு சங்கீதம் எடுபடாமல் போன மாதிரியாகிவிட்டது, ராஜ் டிவிக்காரர்களின் இந்த நேர்மையான முயற்சி.

ஏஎம் ரத்னம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும், இந்தப் படத்தில் தன் மகனுக்கு தேவையற்ற பில்டப் எதுவும் கொடுக்காமல் அவரை சாதாரண கேரக்டராக வரவைத்திருந்தார்.

ஆனால் கொடுமை பாருங்கள்… சென்னையை விட்டால் அடுத்த 100 கிமீ தூரத்துக்கு வேறு தியேட்டரில் ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தையே பார்க்க முடியவில்லை. அந்தளவு தியேட்டர் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் இந்தப் படத்துக்கு.

இவர்களின் அசுர பலத்துக்கு முன்னால் யார் என்ன செய்துவிட முடியும்?

அஆஇஈ… ஏவிஎம் என்ற காலிப் பெருங்காய டப்பா(பிராஞ்ச் -2)விலிருந்து வந்துள்ள படம்… அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லை!

ஆக இந்தப் பொங்கல், அரசியல் தொடங்கி சினிமா வரையில் தமிழனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதாகவே வந்து போனது!

வில்லு படம் பார்த்தார் அஜீத்


பரபரப்பு ஓயட்டும் என்று காத்திருந்தாரோ என்னவோ? கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பிரார்த்தனா தியேட்டரில் வில்லு படத்தை பார்த்து ரசித்தார் அஜீத். ரசிகர்கள் தன்னை பார்த்துவிட்டால் வீண் ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே காரை விட்டு இறங்கவில்லையாம். (இந்த தியேட்டரில் காரில் அமர்ந்தபடியே படம் பார்க்கிற வசதி உண்டு)

படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் விஜய்க்கும் போன் செய்து பாராட்டினாராம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவர், ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.

சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'அசல்' படத்திற்காக விருமாண்டி ஸ்டைல் மீசை வைத்திருக்கிறார் அஜீத். அரிவாள் சைசுக்கு இருக்கும் இந்த கனத்த மீசையோடு தியேட்டருக்கு போனதால், ஒன்றிரண்டு ரசிகர்கள் உற்றுப்பார்த்தார்களே தவிர, அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.

ஒருபுறம் சம்பள பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், அசலுக்காக தனது அசல் கெட்டப்பை மாற்றிக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை தல!

Monday, January 19, 2009

வில்லு சீறிப்பாயனுமா? விஜய்க்கு டிப்ஸ்


நன்றி - நான் ஆதவன
இது தமிழ் மசலாப் பட ரசிகர்களுக்கு மட்டும். உலக சினிமா பார்ப்பவர்கள் இந்தப் பதிவை படிக்காமல் இருப்பது நலம்.

1)ஓப்பனிங் சாங்: படம் எப்படி இருந்தாலும் முதல் பாடலில் அரங்கம் அதிர ஆடித் தீர்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால் தியேட்டரில்
அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் இருந்தால்.... பின்ன என்னங்க குஷ்புவை போய் ஆட வச்சீங்கன்னா எவன் பார்ப்பான்?
இதென்ன மானாட மயிலாடன்னு நினைச்சீங்களா? டி.வில பாட்டை பார்த்த எனக்கே நைட்டு சாப்பாடு இறங்கல...பாவம்
தியேட்டர்ல படத்தை பார்த்தவங்க. அப்புறம் "அன்பு வேணும்", "ஆப்பம் வேணும்" எத்தனை நாளுக்கு பாடுவீங்க,
"நீ எனக்கு சகோதரன்" "நான் உனக்கு மச்சான்" சும்மா உறவு முறை வச்சு பாட கூடாது. அப்புறம் பிரச்சனையாயிடும்.

2)ரிலீஸ் தேதி: இப்பெல்லாம் பொங்கல், தீபாவளின்னு தனுஷ் படமும் இறங்க ஆரம்பிச்சுடிச்சு. "பொல்லாதவன்" வந்து
ATMக்கு ஆப்பு வச்சுது. "யாரடி நீ மோகனி" குருவிக்கு சூடு வச்சுது. இப்ப உங்க வில்லு "படிக்காதவனை" ஓட வச்சிடும்.
அதுனால தனுஷ் படம் எப்ப இறங்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி ரிலீஸ் பண்ணுங்க. அவர் வேற
நடிக்கவெல்லாம் செய்யிறாரு. அப்புறம் காசுக்கு ஆசப்பட்டு அதாவது "வீக் எண்ட் கலெக்ஷன்" பார்த்து அமெரிக்காவில
நாலு நாள் முன்னாடி ரிலீஸ் பண்ணீங்க. இப்ப என்னாச்சு? படத்தை பார்த்துட்டு அப்பவே நிறைய பேர் வில்லை
இராமன் உடைச்ச மாதிரி உடைச்சுட்டாங்க. அதைப் படிச்சுட்டு இங்க நிறைய பேர் பொங்கல் லீவுல இந்த படத்துக்கு
போக வேணாம்ன்னு முடிவெடுத்துட்டாங்க. (இல்லைன்னா மட்டும் போவோமான்னு கேட்டா நீங்க தான் உண்மையான புத்தசாலி).

3)இசை மற்றும் நடனம்: ஆமா ஏன் எல்லா பாட்டையும் தெலுங்கலிருந்தே எடுக்குறீங்க??? வேற மாநிலமே உங்க
காதுக்கு கேக்கலையா?. நம்ம ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் தெலுங்கு தான். உங்க பாட்டை கேட்டாலே இது தெலுங்கு
பாட்டுடான்னு உடனே சொல்லிடுவாங்க. பாடல்கள் ஹிட்டானாலே படம் ஹிட்டாயிடும்ன்னு நினைப்பா உங்களுக்கு???
சரி முன்னவாவது டான்ஸ் நல்லா ஆடிகிட்டு இருந்தீங்க. இப்ப என்னாச்சு? வர வர உங்க டான்ஸ் சகிக்கல.
இனிமே உங்க இசையமைப்பாளர்கிட்ட சொல்லி சொந்தமா இசையமைக்க சொல்லுங்க.

4)கதைக்களங்கள்: முன்னெல்லாம் தெலுங்கிலேருந்து கதையை உருவுனீங்க. ஜெயம் ரவி குடும்பம் உங்களுக்கு ஆப்பு
வச்சுது. இந்த பக்கம் மலையாளம். அத ஏற்கனவே பி.வாசுன்னு ஒருத்தர் உருவிகிட்டு இருக்காரு. புது கதைன்னு
சொல்லி குருவி எடுத்தீங்க. அது முக்கால் வாசி "சத்தரபதி"ன்னு ஒரு தெலுங்கு படத்திலிருந்து எடுத்திருக்கீங்கன்னு
கொஞ்சம் பேருக்கு தான் தெரியும். அதுவும் பாக்க சகிக்கல. இப்ப இந்திப் படம். ஆமா உங்களுக்கு கொஞ்சம் கூட
மூளையே இல்லையா???? போயும் போயும் அந்த "சோல்ஜர்" இந்தி படம் தானா கிடைச்சுது?. அதுவே ஒரு டப்பா
படம். சாரூக், ஹிருத்திக் ரோஷன் படம் எதுனா முயற்சி பண்ண தோணலையா உங்களுக்கு? பேசாம பி.வாசு கூட ஒரு
மலையாள ரீமேக் படம் பண்ணுங்க. எங்கையோஓஓஓஒ போயிடுவீங்க

5)இமேஜ்: இந்த எழவு எப்ப வந்தது உங்களுக்கு??? அந்த மண்ணெல்லாம் ஒன்னும் கிடையாது. உங்களுக்கு காமெடி
தான் நல்லா வருதில்ல, உங்க பாடி லாங்வேஜும் அதுக்கு ஒத்துழைக்குது அப்புறம் ஏன் தனியா பைட் பண்ணி காமெடி
பண்றீங்க? வடிவேலு காமெடியான செத்து செத்து விளையாடுறத வேற கடந்த இரண்டு படங்கள்ல பண்ணி காமெடி
பண்ணியிருக்கீங்க. அப்புறம் படத்துல வடிவேலுவும், விவேக்கும் எதுக்கு?
அப்புறம் இந்த வீர வசனம் பேசி டயத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா தங்கர் பச்சானோடவாவது ஒரு படம்
பண்ணுங்க ஏன்னா நடிப்புன்னா என்னான்னு தெரியனுமில்ல. அப்புறம் பின்னால அரசியல்வாதியா ஆயிட்டு, நடிக்க
தெரியாம பொழப்பு ஓடாது பாருங்க.

டிப்ஸ்: இதையெல்லாம் படிச்சுட்டு நான் தல ரசிகன்னு கேவலமான முடிவுக்கு வருபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது
"உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு" :)

புரியலன்னா இதற்கு தொடர்புடைய லின்ங் இது தான். படிச்சுட்டு இங்க வாங்க

Tuesday, January 13, 2009

வில்லு - விமர்சனம்



விஜய் பிரபுதேவா காம்பினேஷன். போக்கிரியின் ஹேங் ஓவர் இன்னும் போகவில்லை. கிட்டத்தட்ட அதே முகங்கள்.

ராணுவத்தில் மேஜரான தனது அப்பா விஜய்யை கொன்று தேசத்துரோகி பட்டம் கட்டிய பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன் க்ரூப்பை மகன் விஜய் பழிவாங்கும் அக்மார்க் தெலுங்குக் கதை.

விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...

தான் அமைக்கும் டான்ஸ் ஸ்டெப்களில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அடிக்கடி காட்டும் பிரபுதேவா இதில் டைட்டில் சாங்கில் ஆரம்பித்து பல இடங்களில் தானொரு எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று பறைசாற்றியிருக்கிறார். (எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா என்பது டைட்டிலுக்கு முன் 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்று நற்பணிமன்றக் கொடியைக் காட்டுவதால் சந்தேகம் வருகிறது.)

இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான். ஆனால் ஃப்ளாஷ்பேக்குக்கு அப்புறம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. குருவியில் மண்ணுக்குள் போன ஹீரோ ஆற்றுக்குள் இருந்து வருவது போல, இதில் புதையுண்ட பிறகு புயல் வந்து மண்ணை விலக்கி.. போதும்டா சாமி. ஏம்ப்பா.. இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா? கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருந்தா கில்லியாகக் கூடிய கதையை எப்படிக் கொண்டு போக என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். இடைவேளையின்போது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றிய படம் க்ளைமாக்ஸின் ஜவ்வால் ‘ஆளை விட்டாப் போதும்’ என்று சொல்ல வைக்கிறது.

நயன்தாரா. அவ்வப்போது சோர்ந்துவிடும் ரசிகர்களை உயிர்ப்போடு வைக்கிறார் நயன்தாரா. முகபாவனைகள், உடைக் குறைப்பு என்று இளைஞர்களைத் தாறுமாறாகப் பந்தாடுகிறார். போதாத குறைக்கு சரக்கடித்து விஜயுடன் மல்லுக்கு நிற்கிறார்.

வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்த அளவுக்கு சீன்கள் அமைக்க டைரக்டர் திணறியிருப்பது அந்த மாட்டு ஃபைட்டிலேயே தெரிகிறது. இடைவேளைக்கு முன் ஓரளவுக்கு இருந்தவரை இடைவேளைக்குப் பின் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் இசை. பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழக்கமான தெலுங்குவாடை இருப்பினும் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் பல காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பில்லாவை நினைவுபடுத்துகின்றன.

பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)

வில்லு - குறி தவறிவிட்டது.

நன்றி - பரிசல்காரன்

Saturday, December 20, 2008

வில்லு படம் பார்க்க


அதிர்ந்து போயிருக்கிறது வில்லு பட யூனிட். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் Villu படத்தின் பாடல்களை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது இணையதள அமைப்பு ஒன்று! இதுபற்றி கருத்து தெரிவித்த அப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அவை வில்லு படத்தின் பாடல்களே அல்ல என்று விளக்கமளித்தார். இந்த நிலையில் மேலும் இரண்டு கிளிப்பிங்ஸ்களை வெளியிட்டு, விஜய் ரசிகர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது ட்யூப் டமில்.காம்.

சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய வில்லு படத்தின் இரண்டு சண்டைக்காட்சிகள் இந்த இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருக்கும் இந்த காட்சிகள், பின்னணி இசையோடு வெளியிடப்பட்டிருக்கிறது. இறுதி வடிவமான சவுண்ட் எபெக்ட் இல்லை என்பதால், எடிட்டிங் ரூமிலிருந்து சவுண்ட் எபெக்ட்ஸ் செய்பவரிடம் போகிற நேரத்தில்தான் இது கசிந்திருக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறதாம்.

23.12.08 அன்று
அய்ங்கரன் நிறுவனம் அந்த காட்சிகளை நீக்கி விட்டது.

எனவே ரசிகர்கள் மன்னிக்கவும்.
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009