Showing posts with label Endhiran. Show all posts
Showing posts with label Endhiran. Show all posts

Friday, May 22, 2009

Endhiran Aishwarya Rai in Different Costumes


எந்திரன்: 57 விதவிதமான காஸ்ட்யூம்களில் ஐஸ்வர்யா!
ஒரு மேக்கப் கலைஞர் நினைத்தால் யாரையும் எளிதில் அழகாக்கிவிடலாம். இயற்கையின் படைப்பையே தங்கள் கைவண்ணத்தால் இன்னும் அழகாக்கிக் காட்டும் கலை கைவரப்பெற்றவர்கள் அவர்கள்.

வெளிநாடுகளில் மேக்கப் என்பது மிகப் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த கலையாக கருதப்படுகிறது. குறிப்பாக ஹாலிவுட்டில் ஒரு ஹீரோவுக்குரிய முக்கியத்துவம் அவரது மேக்கப் கலைஞருக்கும் தரப்படுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழில் இப்போதுதான் மேக்கப்புக்கான முக்கியத்துவம் கூடி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல மேக்கப் கலைஞராக இருப்பவர் ஓஜா ரஜனி. இன்றைய பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பெரும்பாலும் நாடுவது இவரைத்தான்.

குறிப்பாக ஐஸ்வர்யா ராய்க்கு இவர்தான் ஆஸ்தான மேக்கப் கலைஞர். உலக அழகியை விதவிதமான, கிளர்ச்சியான தோற்றங்களில் காட்டும் கலையில் ஓஜா ரஜனியின் திறமையைப் பார்த்து, அவரையே சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு மேக்கப் கலைஞராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவின் தோற்றம் குறித்து ஓஜா இப்படிக் கூறுகிறார்:
எந்திரன் இந்தியாவின் மிகச் சிறந்த ஷோவாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்படம் என்று பார்த்தால் நான் ஐஸ்வர்யா ராயின் மேக் அப் உமனாக பணியாற்றுவது எந்திரனில்தான். ஆனால் எட்டு வருடங்களாக நான் ஐஸ்வர்யாவுடன் பணியாற்றி வருகிறேன். அவர் நடித்த அத்தனை விளம்பரங்களுக்கும் நான்தான் மேக்கப் செய்துள்ளேன்.

அவருக்கு மிக மிக அழகான முக அமைப்பு. ஒரு நிஜமான தொழில்முறைக் கலைஞர் அவர்… அவர் முகத்தை எந்த விதத்தில் மெருகேற்ற வேண்டும் என்றாலும் உடனடியாக ஒப்புக் கொள்வார். ஒரு மகாராணியைப் போன்ற கம்பீரமான முகம் அவருக்கு. எந்த அளவு குறைந்த மேக்கப்பிலும் ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராய். உலக அளவில் வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு… குறிப்பாக அவரது கண்கள்!

எந்திரனில்…
எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 57 விதவிதமான காஸ்ட்யூம்கள் மற்றும் மேக்கப் உத்திகளை ஐஸ்வர்யாவுக்கு கையாண்டுள்ளோம். குறிப்பாக ஒரு பாடலில் மெக்ஸிகன் பழங்குடி இனப் பெண்ணைப் போன்ற தோற்றத்தில் வருவார். அந்த தோற்றத்தில் அவரது இளமையும் கவர்ச்சியும் இளைஞர்களை தீப்பிடிக்க வைக்கும். இன்னொரு பக்கம் மணீஷ் மல்ஹோத்ராவின் சிறப்பான டிஸைனிங் படத்துக்கே புதிய அழகைக் கொடுத்துள்ளது…, என்கிறார் ஓஜா ரஜனி.

நன்றி - என்வழி.காம்

Friday, April 10, 2009

Enthiran Latest News - Director Shankar Press Release


Thanks - Envazhi.com

இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!

ருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ஸ்டைல் சாம்ராட்டுடன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.

சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.

தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.

ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.

எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக டைம்ஸ் ஆப் இந்தியா அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.

சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!

எந்திரன் - என்ன நிலை இப்போது?

இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.

படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:

“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.

எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.

முதல்வனில் மிகப்பெரிய ஹிட் உப்புக்கருவாடு. அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய அதிரடிக்காரன் உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.

எந்திரனில்மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப்ப டத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”

சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…

சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.

இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.

எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.

இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?

சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.

Friday, March 27, 2009

Rajini vote(voice) in Election 2009 - ‘என் ஓட்டு யாருக்கு?’ - மனம் திறக்கும் ரஜினி!!



Thanks - http://onlysuperstar.com/

Friday, March 13, 2009

Endhiran in kumudam - குமுதத்தின் லேட்டஸ்ட் எந்திரன் கவர் ஸ்டோரி


எந்திரன் துவங்கியதிலிருந்து அவ்வப்போது படம் குறித்து சிறப்பு கட்டுரைகள், செய்தி தொகுப்புகள் வெளியிட்டு தனது வாசகர்களை திருப்திபடுத்த முயன்று வருகிறது குமுதம்.

அதன் தொடர்ச்சியாக இதோ எந்திரனைப் பற்றி குமுதத்தில் மற்றுமோர் கவர் ஸ்டோரி. இடையில் சிறிது காலம் விட்ட கேப்பை இந்த சிறப்பு தொகுப்பில் கவர் செய்ய முயன்றிருக்கிறார்கள்.

படத்தை கிளிக்கி தெளிவாக பார்க்கவும்

இந்த தொகுப்பிற்காக குமுதம் நிறையவே மெனக்கெட்டிருப்பது நன்கு புரிகிறது. அங்குமிங்கும் படித்த, கேள்விப்பட்ட, துணுக்குகளை வைத்து, இன்னும் கொஞ்சம் தகவல்களை கஷ்டப்பட்டு திரட்டி இப்படி ஐந்து பக்கங்கள் தயார் செய்வது (இழுப்பது) குமுதத்திற்கு மட்டுமே கைவந்த கலை.

பரவாயில்லை….உண்மையோ, பொய்யோ செய்தியை சுவாரஸ்யமாக தர முயன்றதற்கு குமுதத்திற்கு ஒரு பூச்செண்டு தரலாம்.

எப்படியோ குமுதத்திற்கு மற்றுமொரு கைகொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
நன்றி - Onlysuperstar.com

Wednesday, February 18, 2009

Enthiran Shooting in Citi Center Chennai - எந்திரன் : சிட்டி சென்டரை கலக்கிய சூப்பர் ஸ்டார்



சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தை சூப்பர் ஸ்டார் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் என்றே கூறலாம். கடந்த ஓரிரு தினங்கள் எந்திரன் படபிடிப்பு இரவு நேரத்தில் இங்கு நடைபெற்றது. அப்போது சூப்பர் ஸ்டாரை ஷூட்டிங்கில் பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றவர்கள் அவரது சுறுசுறுப்பையும், யூனிட்டாரிடம் அவர் பழகும் விதத்தை கண்டு சொக்கிப்போய்விட்டனர்.

நாம் முன்பே கூறியது போல எந்திரன் படப்பிடிப்பு சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் சென்ற வார இறுதியில் தாடாலடியாக நடந்து முடிந்துவிட்டது. அந்த இடத்தில் மறுபடியும் படப்பிடிப்பு நடக்குமா என்று தெரியவில்லை.

சிட்டி சென்டரில் எந்திரன்

தற்போது எந்திரன் குழு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புகழ் பெற்ற வணிக வளாகமான சிட்டி சென்டருக்கு சென்றுவிட்டது. ஐநாக்ஸ் திரையரங்கம் இங்கு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் முதல் இங்கு தான் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. சூப்பர் ஸ்டார் அங்கு உள்ள பிரபல துணி கடையான Life Style இல் பர்ச்சேஸ் செய்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஸ்டைலான சபாரியில் சூப்பர் ஸ்டார் காணப்பட்டார்.

படப்பிடிப்பை மொய்த்த உயர்தட்டு மக்கள்

வளாகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தான் இரவு நேரத்தை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்படியிருந்தும், ஐநாக்ஸ் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வந்த மொத்த கூட்டமும் (4 தியேட்டர் கூட்டம்) ஷோ முடிந்து நள்ளிரவு திரும்புகையில், சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு நடப்பதை பார்த்தவுடன் அதை பார்க்க அந்த இடத்தை மொய்த்துவிட்டனர். சூப்பர் ஸ்டாரை படப்பிடிப்பில் அந்த கெட்டப்பில் அந்த இரவு நேரத்திலும் உற்சாகமாகிவிட்டனர் வந்திருந்த கூட்டத்தினர். மேலும் சூப்பர் ஸ்டாரை பார்த்தவுடன் சிலர் ஆர்வமிகுதியால் படப்பிடிப்பு பகுதியின் உள்ளேயே வந்துவிட அங்கு பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஒவ்வொரு ஷோவும் முடிய முடிய கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. யூனிட்டார் அவர்களை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டனர். வளாகத்தில் அந்த நேரம் பணியில் இருந்த செக்யூரிட்டிக்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. தள்ளு முள்ளு நீடிக்கவே படப்பிடிப்பை இடையூறின்றி தொடர போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.


“முரட்டுத் தனம் வேண்டாம்… அன்பா சொல்லுங்க…”

மயிலை காவல் நிலைய போலீஸார் வந்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அனைத்தையும் கவனித்துகொண்டிருந்த சூப்பர் ஸ்டார், போலீசாரிடம், “தயவு செய்து யாரையும் அடிக்கவோ, விரட்டவோ வேண்டாம். அன்பாக கூறுங்கள். அவர்களாக இடையூறு ஏற்படுத்தாமல் போய்விடுவார்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதன் படியே நடந்து போலீஸார் கூட்டத்தை ஓரளவு கண்ட்ரோல் செய்தனர்.

வியந்த பொதுஜனம்

படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரை கண்ட அனைவரும் சொன்னது இதைத்தான். “வாவ்… ரஜினியா இது…. என்ன இந்த வயசுலயும் இப்படி யங்கா, ஸ்மார்ட்டா இருக்காரு மனுஷன்..” என்பது தான். மேற்படி பொதுஜனங்களில் நிறையே பேர் வீட்டுக்கு போவதை ஒத்தி வைத்தது படப்பிடிப்பை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சூப்பர் ஸ்டாரின் நடை, உடை, பாவனை ஆகியவ்ற்றை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.

மடுவும் மலையும் - ஒரு தொழிலாளியின் அனுபவம்

இதே இடத்தில் தான் விரல் நடிகர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பும் நடைபெற்றதாக தெரிகிறது. அது பற்றி கூறிய ஒரு அனுபவம் மிக்க லைட் பாய் ஒருவர், “சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் அனைவரிடமும் அன்பாக, எந்த வித பந்தாவுமின்றி நடந்துகொள்கிறார். அவரை நேரில் பார்ப்பவர்கள், அவரது நடவடிக்கைகளை பார்ப்பவர்கள் அவரது எளிமையை கண்டு வியந்து போகிறார்கள். தான் ஒரு பெரிய நடிகர் என்ற நினைப்பு அவரிடம் இல்லை. மாறாக ஒரு புதுமுகம் போல அர்ப்பணிப்புடன் நடிக்கிறார். ஆனால் அந்த விரல் நடிகர் அவரது படப்பிடிப்பில் செய்யும் பந்தா இருக்கிறதே அப்பப்பா… என்ன அலட்டல்… என்ன திமிரு…. யாரையும் மதிப்பதில்லை. மனசுக்குள்ளே ஏதோ பெரிய ******ன்னு நினைப்பு. மேலும் இந்த மனுஷனுக்கு 60 வயசாவுதுன்னு (சூப்பர் ஸ்டார்) சொல்றாங்க. ஆனால் என்னா வேகம் என்னா சுறுசுறுப்பு… அடேங்கப்பா… ஷூட்டிங்கில் அவர் நடந்தா அவர் கூட நாங்க ஓட வேண்டியிருக்கு. அந்தளவு மனுஷன் ஸ்பீடா நடக்குறார். சுறுசுறுப்பா இருக்குறார். அவருக்கு 60 வயசாவுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா இவன் (விரல் நடிகரை குறிப்பிட்டு) வயசு என்னா? சொங்கி மாதிரி தூங்கி வடியுறான். இவன் முகத்தை பார்த்தாலே நமக்கு தூக்கம் தூக்கமா வருது.” என்று அங்கலாய்த்து கொண்டார் அந்த லைட் பாய். (இரண்டு படப்பிடிப்பையும் பார்த்திருப்பார் போலிருக்கிறது).

செக்யூரிட்டிகளுக்கு வெகுமதி…

சிட்டி சென்டர் வளாகத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது. அவர்களின் கீழ் மட்டும் வளாகத்தில் பாதுகாப்பு பணியை மேற்க்கொள்ளும் சுமார் 35 பேர் பணியாற்றுகின்றனர். படப்பிடிப்பு ஸ்மூத்தாக நடக்க உதவிய அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் வெகுமதி அளித்ததாக கூறப்படுகிறது. (செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளரிடம் ஒரு தொகையை அளித்தது அனைவருக்கும் பிரித்து கொடுத்துவிடும்படி சூப்பர் ஸ்டார் கூறியதாக தெரிகிறது.)

இன்று அருகில் உள்ள பிரபல கல்யாணி மருத்துவமனையில் படப்பிடிப்பு நடைபெறக்கூடும்.

மொத்தத்தில் சிட்டி செனட்டர் வளாகத்தை சூப்பர் ஸ்டார் தனது குணங்களால் வசீகரித்துவிட்டார். சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் ஷங்கர் அவருக்கு ‘வசீகரன்’ என்று !!

நன்றி - onlysuperstar.com

Tuesday, February 17, 2009

Enthiran Photos New - எந்திரன் புதிய படங்கள் புதுசு


படத்தை க்ளிக்கி தெளிவாக பார்க்கவும்!












Thursday, February 05, 2009

Enthiran latest update - ரஜினி வீட்டிலிருந்து ஐஸ்சுக்கு சாப்பாடு!


ரஜினி விரும்பினால் ஒரு நடமாடும் வீட்டையே கொண்டு வந்து வைக்க தயாராக இருக்கிறது தமிழ்சினிமா. ஆனாலும் கேரவேனுக்கு பதிலாக, சுமாராக இருந்தாலும் தனது பழைய காரே போதும் என்கிறாராம் ரஜினி. எந்திரன் படப்பிடிப்பில் இந்த பழைய காரிலேயே அமர்ந்து மேக்கப் போட்டுக் கொள்வதும், ஓய்வெடுப்பதுமாக இருக்கும் ரஜினியை, 'மெய்யாலுமே அவரு ஞானிப்பா' என்கிறார்கள் யூனிட்டில்!

சென்னையை சுற்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், வீட்டிலிருந்துதான் சாப்பாடு வருகிறது சூப்பர் ஸ்டாருக்கு. தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் தனது வீட்டு சாப்பாட்டையே வழங்குகிறாராம்!
அதுமட்டுமல்ல, தான் படிக்கும் ஆன்மீக புத்தகங்களையும் ஐஸ்வர்யாராய்க்கு கொடுத்து படிக்க சொல்கிறாராம். போகிற போக்கில் உலக அழகி, யுனிவர்சல் சாமியாரிணி ஆனாலும் ஆகிவிடுவார் போலிருக்கிறது. இன்னொரு சுவாரஸ்யம், ஐஸ்வர்யா நடிக்கும் தனி காட்சிகளையும் வேடிக்கை பார்த்து டிப்களை சொல்கிறாராம் !

Wednesday, January 21, 2009

இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…


அடுத்த சூப்பர் ஸ்டார்: அமீர் போட்ட போடு!

ஒரு படத்தில் நடித்துவிட்டு தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் அடிக்கலாம் போலுள்ளது என்கிறார் அதிரடி இயக்குநர் அமீர்.

ஒருவழியாக யோகி படப்பிடிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டார் அமீர். பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கண்ணபிரான். பருத்தி வீரனை விட நூறு மடங்கு பவர்ஃபுல் படம் இது என அமீரே சிலாகித்துச் சொன்ன திரைக்கதை இந்தப் படத்தினுடையது.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு வீம்பில் யோகி படத்தில் நடிக்கப் போய்விட்டார் அமீர்.

சுப்பிரமணியம் சிவா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போது தனது கண்ணபிரானை தான் நினைத்தபடி வார்த்தெடுக்கும் பணியில் இறங்கிவிட்டார் அமீர்.

இந்தப் படத்தில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லையாம். ஏற்கெனவே முடிவு செய்தபடி ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். ரவியின் தந்தை நிர்வகிக்கும் ஜெயம் கம்பெனியே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்து அமீர் இப்படிக் கூறுகிறார்:

கண்ணபிரான் தமிழ் சினிமாவை இன்னொரு பரிமாணத்தில் காட்டும். அதற்கு மேல் ஏதாவது சொன்னால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எங்களைப் போன்றவர்கள் நடித்தாலும் படம் பெரிய வெற்றி பெறும் என்பதை உணர்த்தவே யோகியில் நடித்தேன். தொடர்ந்து நடிகர்களின் பின்னால் இயக்குநர்கள் ஓடிக் கொண்டே இருப்பதை தவிர்க்கவும்தான் இந்த முடிவு.

இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…

ஒரு படம் நடித்து வெளிவந்தாலே, அவரவர் தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த நிலைக்கு வர ரஜினி சார் எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பார், எத்தனை அவமானங்களைத் தாங்கியிருப்பார். எத்தனை ஆண்டுகள் பிடித்தது… ஆனால் சும்மா கையை காலை ஆட்டிக்கிட்டு, அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்னு சொல்றவங்களைப் பார்த்தால் அடித்துவிடலாம் போல் உள்ளது.

முதலில் ரஜினி அளவுக்கு சாதனை பண்ணுங்க. நிரூபிச்சுக் காட்டுங்க. மக்களே பார்த்து தருவார்கள் ஏதாவது ஒரு பட்டத்தை. உங்களுக்கு நீங்களே ஏன் சூட்டிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்?

இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே என்னைப் போன்ற இயக்குநர்கள் எல்லாம் நடிப்பில் குதித்திருகிகறார்கள். மக்களுக்குப் பிடித்திருந்தால் போதும். வேறு எந்த விமர்சனம் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை, என்கிறார் அமீர்.

அப்படிப் போடுங்க!

நன்றி - என்வழி

Tuesday, January 13, 2009

எந்திரனுக்கு ஒரு புதுவில்லன்!


சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு எப்போதுமே மிகுந்த முக்கியத்தவம் அளிக்கப்படுவது வழக்கம். என்னதான் படம் தனக்காக ஒடினாலும், படத்தில் ஒரு பலமான வில்லன் இருப்பது கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் என நம்புபவர் சூப்பர்ஸ்டார்.

இதற்காகவே, பல படங்களில் வில்லனுக்கு தன்னைவிட கூடுதல் முக்கியத்துவம் தரச் சொல்லியிருப்பார்.
முரட்டுக் காளையில் ஜெய்சங்கரை வில்லனாக சிபாரிசு செய்தவர் ரஜினிதான்.

மிஸ்டர் பாரத்தில் சத்யராஜ்தான் அந்த வேடத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தவரும் ரஜினிதான். லேட்டஸ்ட் பிளாக் பஸ்டர் சிவாஜியில், சுமனை வில்லனாக நடிக்க வைத்தது வரை, தனது வில்லனாக யார் வரவேண்டும் என்பதை ரஜினியே தீர்மானிக்கிறார்.

இப்போது எந்திரன் படத்திலும் பாலிவுட்டில் புகழ் பெற்ற ஒரு வில்லனை அறிமுகப்படுத்துகிறார்கள்.

டேனி டெங்ஸோங்பா…

குர்பானி, குதா கவா, அஜ்நபி போன்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் மூலம் மிகப் பிரபலமான நடிகர் இவர்.

அமிதாப் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகராக பேசப்பட்டவர். இவர்தான் இப்போது எந்திரன் பட வில்லன். இவருக்குமுன் தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

டேனியின் சேர்க்கை படத்துக்கு நிச்சயம் பலம்தான். காரணம் இந்திப் படவுலகில் டேனியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் வட்டமுண்டு.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற டேனி, ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். செவன் இயர்ஸ் இன் திபெத் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளார்.

நன்றி - என்வழி.காம்
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009