Wednesday, February 18, 2009

Enthiran Shooting in Citi Center Chennai - எந்திரன் : சிட்டி சென்டரை கலக்கிய சூப்பர் ஸ்டார்சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தை சூப்பர் ஸ்டார் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் என்றே கூறலாம். கடந்த ஓரிரு தினங்கள் எந்திரன் படபிடிப்பு இரவு நேரத்தில் இங்கு நடைபெற்றது. அப்போது சூப்பர் ஸ்டாரை ஷூட்டிங்கில் பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றவர்கள் அவரது சுறுசுறுப்பையும், யூனிட்டாரிடம் அவர் பழகும் விதத்தை கண்டு சொக்கிப்போய்விட்டனர்.

நாம் முன்பே கூறியது போல எந்திரன் படப்பிடிப்பு சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் சென்ற வார இறுதியில் தாடாலடியாக நடந்து முடிந்துவிட்டது. அந்த இடத்தில் மறுபடியும் படப்பிடிப்பு நடக்குமா என்று தெரியவில்லை.

சிட்டி சென்டரில் எந்திரன்

தற்போது எந்திரன் குழு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புகழ் பெற்ற வணிக வளாகமான சிட்டி சென்டருக்கு சென்றுவிட்டது. ஐநாக்ஸ் திரையரங்கம் இங்கு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் முதல் இங்கு தான் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. சூப்பர் ஸ்டார் அங்கு உள்ள பிரபல துணி கடையான Life Style இல் பர்ச்சேஸ் செய்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஸ்டைலான சபாரியில் சூப்பர் ஸ்டார் காணப்பட்டார்.

படப்பிடிப்பை மொய்த்த உயர்தட்டு மக்கள்

வளாகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தான் இரவு நேரத்தை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்படியிருந்தும், ஐநாக்ஸ் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வந்த மொத்த கூட்டமும் (4 தியேட்டர் கூட்டம்) ஷோ முடிந்து நள்ளிரவு திரும்புகையில், சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு நடப்பதை பார்த்தவுடன் அதை பார்க்க அந்த இடத்தை மொய்த்துவிட்டனர். சூப்பர் ஸ்டாரை படப்பிடிப்பில் அந்த கெட்டப்பில் அந்த இரவு நேரத்திலும் உற்சாகமாகிவிட்டனர் வந்திருந்த கூட்டத்தினர். மேலும் சூப்பர் ஸ்டாரை பார்த்தவுடன் சிலர் ஆர்வமிகுதியால் படப்பிடிப்பு பகுதியின் உள்ளேயே வந்துவிட அங்கு பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஒவ்வொரு ஷோவும் முடிய முடிய கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. யூனிட்டார் அவர்களை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டனர். வளாகத்தில் அந்த நேரம் பணியில் இருந்த செக்யூரிட்டிக்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. தள்ளு முள்ளு நீடிக்கவே படப்பிடிப்பை இடையூறின்றி தொடர போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.


“முரட்டுத் தனம் வேண்டாம்… அன்பா சொல்லுங்க…”

மயிலை காவல் நிலைய போலீஸார் வந்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அனைத்தையும் கவனித்துகொண்டிருந்த சூப்பர் ஸ்டார், போலீசாரிடம், “தயவு செய்து யாரையும் அடிக்கவோ, விரட்டவோ வேண்டாம். அன்பாக கூறுங்கள். அவர்களாக இடையூறு ஏற்படுத்தாமல் போய்விடுவார்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதன் படியே நடந்து போலீஸார் கூட்டத்தை ஓரளவு கண்ட்ரோல் செய்தனர்.

வியந்த பொதுஜனம்

படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரை கண்ட அனைவரும் சொன்னது இதைத்தான். “வாவ்… ரஜினியா இது…. என்ன இந்த வயசுலயும் இப்படி யங்கா, ஸ்மார்ட்டா இருக்காரு மனுஷன்..” என்பது தான். மேற்படி பொதுஜனங்களில் நிறையே பேர் வீட்டுக்கு போவதை ஒத்தி வைத்தது படப்பிடிப்பை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சூப்பர் ஸ்டாரின் நடை, உடை, பாவனை ஆகியவ்ற்றை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.

மடுவும் மலையும் - ஒரு தொழிலாளியின் அனுபவம்

இதே இடத்தில் தான் விரல் நடிகர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பும் நடைபெற்றதாக தெரிகிறது. அது பற்றி கூறிய ஒரு அனுபவம் மிக்க லைட் பாய் ஒருவர், “சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் அனைவரிடமும் அன்பாக, எந்த வித பந்தாவுமின்றி நடந்துகொள்கிறார். அவரை நேரில் பார்ப்பவர்கள், அவரது நடவடிக்கைகளை பார்ப்பவர்கள் அவரது எளிமையை கண்டு வியந்து போகிறார்கள். தான் ஒரு பெரிய நடிகர் என்ற நினைப்பு அவரிடம் இல்லை. மாறாக ஒரு புதுமுகம் போல அர்ப்பணிப்புடன் நடிக்கிறார். ஆனால் அந்த விரல் நடிகர் அவரது படப்பிடிப்பில் செய்யும் பந்தா இருக்கிறதே அப்பப்பா… என்ன அலட்டல்… என்ன திமிரு…. யாரையும் மதிப்பதில்லை. மனசுக்குள்ளே ஏதோ பெரிய ******ன்னு நினைப்பு. மேலும் இந்த மனுஷனுக்கு 60 வயசாவுதுன்னு (சூப்பர் ஸ்டார்) சொல்றாங்க. ஆனால் என்னா வேகம் என்னா சுறுசுறுப்பு… அடேங்கப்பா… ஷூட்டிங்கில் அவர் நடந்தா அவர் கூட நாங்க ஓட வேண்டியிருக்கு. அந்தளவு மனுஷன் ஸ்பீடா நடக்குறார். சுறுசுறுப்பா இருக்குறார். அவருக்கு 60 வயசாவுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா இவன் (விரல் நடிகரை குறிப்பிட்டு) வயசு என்னா? சொங்கி மாதிரி தூங்கி வடியுறான். இவன் முகத்தை பார்த்தாலே நமக்கு தூக்கம் தூக்கமா வருது.” என்று அங்கலாய்த்து கொண்டார் அந்த லைட் பாய். (இரண்டு படப்பிடிப்பையும் பார்த்திருப்பார் போலிருக்கிறது).

செக்யூரிட்டிகளுக்கு வெகுமதி…

சிட்டி சென்டர் வளாகத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது. அவர்களின் கீழ் மட்டும் வளாகத்தில் பாதுகாப்பு பணியை மேற்க்கொள்ளும் சுமார் 35 பேர் பணியாற்றுகின்றனர். படப்பிடிப்பு ஸ்மூத்தாக நடக்க உதவிய அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் வெகுமதி அளித்ததாக கூறப்படுகிறது. (செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளரிடம் ஒரு தொகையை அளித்தது அனைவருக்கும் பிரித்து கொடுத்துவிடும்படி சூப்பர் ஸ்டார் கூறியதாக தெரிகிறது.)

இன்று அருகில் உள்ள பிரபல கல்யாணி மருத்துவமனையில் படப்பிடிப்பு நடைபெறக்கூடும்.

மொத்தத்தில் சிட்டி செனட்டர் வளாகத்தை சூப்பர் ஸ்டார் தனது குணங்களால் வசீகரித்துவிட்டார். சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் ஷங்கர் அவருக்கு ‘வசீகரன்’ என்று !!

நன்றி - onlysuperstar.com

Related Posts9 கருத்துக்கள்:

Anonymous said...

rajini is a wonderfull human being, I wish god can give him more biger role to play in life.

srivatsan on February 18, 2009 at 9:22 PM said...

Thalaiva, Robo padam mass kalapum...Thanks for the info...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

a real super star of[f] silver screens!!

Anonymous said...

Kodumai, did you get any money 25 paise from Rajini ?

Englishman said...

"Wonderful" is the correct spelling.

ஷங்கர் Shankar on February 19, 2009 at 12:09 PM said...

Thanks Englishman! Now I Modified.

harisivaji on February 19, 2009 at 5:39 PM said...

Hi Shankar,

Thankyou for refering Onlyrajini.com,But if you are using the article from onlyrajini please dont change the orginal images.So that Orginality of the article will be retained because there is some reason for using that images.I hope you understand in right perspective.In future if you want we can refer each other through Feeds....

Thank You,
harisivaji
OnlyrajiniTeam

Anonymous said...

//அந்த விரல் நடிகர் அவரது படப்பிடிப்பில் செய்யும் பந்தா இருக்கிறதே அப்பப்பா… என்ன அலட்டல்… என்ன திமிரு…. யாரையும் மதிப்பதில்லை. மனசுக்குள்ளே ஏதோ பெரிய ******ன்னு நினைப்பு//


60 கும் 25 கும் வித்தியசம் இருக்க தான் செய்யும்.

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009