Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!


கலைஞர் கடந்த ஆண்டு சனவரி 14 தேதியை தான் இனிமேல் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தார். காலம் காலமாக தொன்று தொட்டு வரும் வழக்கத்தை மாற்ற இவர் யார்?
கலைஞர் என்ன தான் மட்டும் தான் தமிழ் காவலர் என்று யாரிடமாவது சான்று பெற்றுள்ளாரா!
அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை நீக்கி பழையபடியே ஏப்ரல் 14 தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பார்! இதை கேட்கிற தமிழ் நாட்டு மக்கள் என்ன கேனயர்களா!

எதை எதையோ எழுதலாம் என்று இருந்தேன்! இந்த நல்ல நாளில் அரசியல் சாக்கடைகளைப்பற்றி பேச வேண்டாம் என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்!

Friday, April 10, 2009

Enthiran Latest News - Director Shankar Press Release


Thanks - Envazhi.com

இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!

ருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ஸ்டைல் சாம்ராட்டுடன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.

சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.

தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.

ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.

எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக டைம்ஸ் ஆப் இந்தியா அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.

சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!

எந்திரன் - என்ன நிலை இப்போது?

இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.

படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:

“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.

எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.

முதல்வனில் மிகப்பெரிய ஹிட் உப்புக்கருவாடு. அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய அதிரடிக்காரன் உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.

எந்திரனில்மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப்ப டத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”

சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…

சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.

இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.

எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.

இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?

சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.

Kamal Unnai pol oruvan Trailer, Movie Gallery, Details


'தலைவன் இருக்கின்றான்' படப்பெயர் மாற்றம் : புதிய பெயர் 'உன்னைப்போல் ஒருவன்'

கமலின் புதிய படமான் "தலைவன் இருக்கின்றான்", இந்தியில் வெளியான "A wednesday" படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். மும்பை குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்திய குடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள். கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

கமல் நசருதீன்ஷா பாத்திரத்திலும் , மோகன்லால் அனுபம்கீர் பாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்திய குடிமகனாக கமலும், கமிஷனராக மோகன்லாலும் நடிக்கின்றனர். தெலுங்கில் மோகன்லாலுக்கு பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை இந்திப்பட இயக்குனர் சக்ரி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாதில் ராமோஜி பிலிம்சிடியில் துவங்கியது. "தலைவன் இருக்கின்றான்" என்று இருந்த இப்படத்தின் பெயரை "உன்னைப்போல் ஒருவன்" என்று மாற்றியிருக்கிறார்கள். மேலும் படத்தின் ஆரம்பமாக ஒரு நிமிட ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் பின்னணி இசையை ஸ்ருதி கமலஹாசன் கவனித்துக்கொள்கிறார். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ராமோஜி பிலிம்சிடியில் நடக்கவுள்ளது.

உன்னைப்போல் ஒருவன் நடிகர்கள் விவரம்




Saturday, April 04, 2009

Ayan film Review - அயன் – திரைவிமர்சனம்



அயன் படம் டவுன்லோட் Ayan online watch & direct download New

கேபிள் சங்கரின் அயன் – திரைவிமர்சனம்

அயன் - ஆக்ஷ்ன் படம் - விமர்சனம் -படம் பட்டாசு New

அயன் முழு விவரம் New

அயன் அட்டகாசமான படங்கள்

அயன் Mp3 பாடல்கள் டவுன்லோட் செய்க

தமிழ் எண்ணங்கள் திரைவிமர்சனம்

அயன்-ஒரு ரசிகனின் பார்வையில்....

அயன்-விமர்சனம்

Wednesday, April 01, 2009

LTTE asks India Support


இந்திய அரசின் முழு ஆதரவு தேவை : புலிகள் வேண்டுகோள்

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் பத்மநாதன், புலிகள் ஆதரவு இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் கொள்கைகளுக்கு விடுதலைப் புலிகள் என்றுமே எதிராக இருந்தது இல்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின் தேசிய உணர்வுகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச தமிழ் சமுதாயம் இதை எதிர்பார்க்கிறது.

தமிழக மக்கள் எங்கள் மீது காட்டி வரும் இரக்கத்துக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர். எப்போதெல்லாம் எங்கள் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனரோ அல்லது, கொல்லப்படுகின்றனரோ அப்போது அவர்களின் முதல் விருப்பம் இந்தியாவுக்கு அகதியாக செல்வதாகத் தான் இருக்கும். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு நடத்த வேண்டும் என இலங்கை அரசு கூறுவதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், பிரச்னைக்கு போரால் மட்டுமே தீர்வு கண்டு விட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே, சர்வதேச சமுதாயம் சண்டையை நிறுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

சண்டை நடக்கும் பகுதிகளில் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதாக தொடர்ந்து எங்கள் மீது புகார் கூறப்படுகிறது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி எங்களுடன் தங்க வைக்கவில்லை. தமிழ் மக்கள் அவர்களாக விரும்பியே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். கொழும்பு செல்வதற்கும், முகாம்களுக்குச் செல்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, எங்களுடன் இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் தமிழர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம், இலங்கை ராணுவம் அதை வன்முறையால் ஒடுக்கியுள்ளது. இவ்வாறு பத்மநாதன் கூறியுள்ளார்.



இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச்சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச்சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

முதலில் புலிகளை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின்னர் தான் அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என்பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது.

அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங்கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009