Sunday, November 30, 2008

தீவிரவாதிகளை வென்ற கதை


தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசுஅறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும்பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாகஉள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ்டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டுஇருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்குவழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள்சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீவைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறுஇருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்றநமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒருகுறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டைநடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்குசென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இதுசொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரியபோராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சிபெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம்மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிகநிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின்அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைகணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொருகுழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாகஇவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும்அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டுகாட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பலஇடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்றசண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும்அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்டஇடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்ததீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேரசண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூடஇருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓடமுயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்கவிரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கிஇருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்றமற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும்சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில்கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில்மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல்ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒருகமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்றுசொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதேசமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்றஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல்படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும்பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலைதீவிரப் படுத்தினர். "

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்தகளைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல்சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதிரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்றுஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலைநிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும்தெரிவித்தார். "

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்துகொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ளசெய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும்அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சிலகுண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும்ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்தநிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோகூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்லமெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னாபின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளேகூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்துகட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்குவாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்கநினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர்சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம்இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவுமிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள்பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும்முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காகஉயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம்செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்டசொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும்கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்குமுன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்துகொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும்சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும்தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும்கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவுகடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

நன்றி - சந்தைநிலவரம்

Thursday, November 27, 2008

மாவீரர் நாள் உரை - 2008 தமிழகத்திற்கு நன்றிதலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.


எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.


இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.


அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி


காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

நன்றி :தமிழ்வின்

மும்பையில் ஏழு இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு- - 78 க்கும் மேற்பட்டோர் பலி - 200 க்கும் மேற்பட்டோர் காயம்மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து இடங்களில் தாக்குதல் நடந்திருந்ததாக முதல்வர் தேஷ்முக் அறிவித்திருக்கிறார்.

தாஜ், ட்ரைடண்ட் போன்ற நட்சத்திர விடுதிகளைத் தேர்ந்தெடுத்தது, பரவலான பார்வையைத் தங்கள் மீது திருப்பும் - விளைவிக்கப்போகும் மரணங்கள் - இந்தியர்களாக மட்டுமே இருக்கக் கூடாது - ஆனால், உலகின் பல பாகங்களிலிருந்துமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் தங்களை அனைவரும் நோக்க வேண்டுமென்ற வெறியுடன் இயங்கியிருக்கிறார்கள், வெறியர்கள்.

டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

மும்பையின் தலை சிறந்த போலிஸ் அலுவலர்கள் இறந்திருக்கின்றனர். ATS Chief Hemant Karkere, Mumbai ACP Ashok Kamte, Cop Vijay Salaskar கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 11 போலிஸினர் - 4 - 5 அதிகாரிகள் உட்பட கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மும்பை முழுவதும் ராணுவம் அனுப்பட்டிருக்கிறது. 5 Columns of army and 200 NSG commondos have been called. படகுகளின் மூலம் தீவிரவாதிகள் வந்திருக்கக் கூடும் - அது ஒன்றே பத்து இடங்களில் நிகழ்ந்த தாக்குதலை - geographically explaining.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாஜ் ஹோட்டலின் உள்ளே - அனைத்து ஊடகங்களின் முழு பார்வையும் பதிந்திருக்கும் பொழுதே -ஐந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். சில பாகங்களில் தீ பிடித்து எரிகின்றது. அடிபட்டு விழுந்தவர்களை தூக்கிக் கொண்டு, இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

இதுவரையிலும் குண்டுகளை ஒளித்து வைத்து விட்டு ஓடிப்போனவர்கள், இந்த முறை நேருக்கு நேராக மோதத் துணிந்திருக்கிறார்கள். அப்பாவிகள் அதிகம் கூடியிருக்கும் - அதிலும் வெளிநாட்டினர் அதிகமிருக்க வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரித்த NDTVயின் பாசு, இது காஷ்மீரத்தில் நிகழ்ந்த யுத்தம் போலிருக்கிறது என்கிறார்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை 80ஐத் தாண்டி விட்டது. 9 பேர் வெளி நாட்டினர். இன்னமும் தாஜ் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

9 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் 2 நபர்கள் உயிருடன் பிடிபடாதிருக்கின்றனர்.3 பேர் தப்பித்து ஓடியிருக்கின்றனர். அகற்றப்படாத உடல்கள் தாஜ் உள்ளே கிடப்பதாக வெளியேறியவர்கள் சொல்லியிருக்கின்றனர். இன்னமும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும். இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்று மகாராஷ்ட்ரா முதல்வர் நிருபர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும்.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து மரணங்களை விதைத்தது போன்று அவர்களையும் மரணத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு - A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.


JAIHIND! Indian Police Officers!


Thanks - nanbanshaji.blogspot


Wednesday, November 26, 2008

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள்! சாதியும் ஓழியும்!


ஒரு காலத்தில் சாதியை தொழில் அடிப்படையில் பிரித்திருந்தார்கள். இடைபட்ட காலத்தில் சில சாதியினரை ஓடுக்கினார்கள். இவர்களுக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றம் மறுக்கப்பட்டது. இந்த தீண்டாமை வன்கொடுமையை அடியோடு ஓழிக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால் இன்று சாதிய இட ஓதுக்கீடு என்பதை வைத்து நடப்பது என்ன? சனநாயக நாட்டில் சாதிய இடஓதுக்கீடு மட்டும் உங்களுக்கு தீண்டாமையாக தெரியவில்லையா?

சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சாதி மனிதனுக்கு எதற்குமே தேவையில்லையே. அப்படி இருக்க ஏன் இந்த சாதியை விடாபிடியாக பிடித்துள்ளீர்கள்?

இன்று சாதி எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது?
1. பள்ளி சாதிசான்றிதழில், 2. கல்லூரி இட ஓதுக்கீட்டில், 3. அரசு உதவிதொகைகளில், 4. வேலைவாய்ப்பு இட ஓதுக்கீட்டில். 5.அரசியல் இட ஓதுக்கீட்டில். இந்த இடங்களில் தான் சட்ட்பூர்வமாகவே சாதி பயன்படுத்தப்படுகிறது.(நான் காண்ட மிகபெரிய வன்கொடுமை இது தான்)

சாதி சங்கங்கள், சாதிகட்சிகள், திருமணங்கள் இவற்றில் பயன்படுத்துவதை சட்டம் தவறு என்றும் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை.

ஓடுக்குதல், சித்தரவதை செய்தல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல், இவற்றில் சாதி பயன்படுத்துவதை சட்டம் தீண்டாமை வன்கொடுமையாக எதிர்க்கிறது.

அன்பர்களே ஓன்றை புரிந்து கொள்ளுங்கள். ஓடுக்குதல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல் என்பவை சாதிய அடையாளத்தில் செய்தால் மாட்டுமே தீண்டாமை அல்ல. எங்கு எப்படி எந்த அடையாளத்தில் செய்தாலும் அது தீண்டாமை தான். சாதியை சொல்லி திட்டினால் தான் வன்கொடுமை என்று கருத வேண்டாம். விருப்பததாக மனிததன்மையற்ற எந்த வார்த்தையை சொல்லி திட்டினாலும் அது வன்கொடுமை தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு சாதி அடையாளம் மட்டும் பூசிக்கொள்ள தேவையில்லை.

சரி எதற்காக இந்த சாதி வேண்டும்? பின்தங்கியவர்கள் முன்னேற இட ஓதுக்கீடுகள் வேண்டும் என்றால் அதற்கு சாதி அடையாளம் தான் வேண்டுமா? ஓரு காலத்தில் சாதிய அடையாள அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தீண்டாமை என்றால் இன்று சாதிய அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எப்படி தீண்டாமையாகாது?

உங்களுடைய குறிக்கோள் என்ன?

பிற்படுத்தபட்ட சாதியை முற்படுத்துவோம். பின்னர் சரிசம பலத்தோடு சாதிசண்டை போடலாம் என்பதா?

முற்படுத்தபட்ட சாதியினர் ஒரு காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் இன்றைய சாதிய இட ஓதுக்கீடு என்பதா?,

முற்படுத்தப்பட்ட சாதியினர் செய்த பாவத்துக்கு தண்டனையா? அல்லது பாவத்துக்கு திருப்பி பலிதீர்க்க இன்றைய இட ஓதுக்கீடா?

படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்புகளிலேயே நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். அது எந்த சாதியினராக இருந்தாலும் சரி எந்த இனத்தினராக இருந்தாலும் சரி. இவர்கள் பொது பிரிவிலேயே கல்லூரிக்குள் தாரளம் நுழைந்து விடலாம்.

பொதுவாக எல்லா சாதியை சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர். அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எல்லா சாதியிலும் இருக்கும் ஏழைமாணவர்கள் மட்டும் தான். இந்த ஏழை மாணவர்களுக்குள் ஏன் உங்கள் சாதிபித்தில் வஞ்சனை காட்டுகிறீர்கள்?


ஆனால் இட ஓதுக்கீடு எதற்காக பலிதீர்க்கவா? ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி சமதாய மேன்மை மறுக்கப்பட்டது என்பது மிக தவறானது. எந்த காலத்திலும் எந்த சாதியாக இருந்தாலும் ஏழைகளுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முற்படுத்தப்பட்ட சாதியில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஏன் உலகுக்கு தெரியாமல் போனது.

நகரத்தில் இருப்பவர்களுக்கு படிக்க கணிணி முதற்கொண்டு ஆசிரியர்கள், நூலகம், ஆய்வு கூடம், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள். மின்சார வசதி என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களே இல்லாமல் சிம்னி விளக்கில் படிக்கிறோம் கிராம மாணவர்கள். இவர்களுக்கு அல்லவா மதிப்பெண் அடிப்படையில் இட ஓதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும்.

இட ஓதுக்கீடு தேவைதான் அதற்காக ஏன் சாதிய அடையாளத்தில் தருகிறீர்கள்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு செய்யலாமல்லவா? அப்போதும் பின்தங்கிய வகுப்பினர் தானே பெரும்பாலும் பயனடைவார்கள். கூடவே முற்படுத்தபட்ட சாதி ஏழைகளும் பயனடைவார்கள் அல்லவா?

எனது வழிபாடு வேறு, உனது வழிபாடு வேறு அதனால் மதமாக பிரிந்துள்ளோம் என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாதியில் என்ன பிரிவினை இருக்கிறது என்பது தான் எனக்கு இன்னும் புறியவில்லை.

ஓரு காலத்தில் தொழில் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று சாதிய அடிப்படையில் எந்த தொழில் உள்ளது. எல்லோரும் எல்லா தொழிலுமே செய்கிறார்களே. அதே போல தான் உணவு பழக்கவழக்கங்களும். எல்லோருமே பிடித்ததை சாப்பிடும் காலம் இது. இதில் எங்கே சாதிபாகுபாடு வேண்டும்?

சாதி என்ற குறுகிய வட்டத்தில் மனதகுலத்துக்கு அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் லாபம் என்ன? சாதிக்கொள்கைகள் தான் என்ன? மதத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. நாட்டுக்கு ஓரு கொள்கை இருக்கிறது. மொழிக்கு ஓரு கொள்கை இருக்கிறது. இனத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. ஆனால் இந்த சாதிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

எனக்கு தெரிந்து தொழிலும், உணவு உட்பட பழக்கவழக்கங்களும் தான். ஆனால் இன்று தொழிலுக்கும் உணவுக்கும் சாதிய பாகுபாடு தேவையே இல்லையே. உணவுக்காக வேண்டுமாயின் சைவம் அசைவம் என பிரிக்கலாம். அதிலும் ஏற்ற தாழ்வு வர வாய்ப்பில்லலையே.

சனநாயக நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த முடியாது. நீ இந்த தொழில் தான் செய்யவேண்டும் என வற்புருத்தவும் முடியாது. அப்படி இருக்க எதற்காக இன்னும் இந்த சாதி அடையாளம்.

மனிதனுக்கு எதற்குமே பயன்படாத சாதிய வட்டம் வேண்டும் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே ஆதரியுங்கள். நிச்சயம் சாதிகள் சமத்துவமும் ஆகாது, சாதி சண்டையம் ஓழியாது. எல்லா சாதியினரும் கல்வி, பொருளாதாரம், ஆயுதம், என அனைத்திலும் சரிசம பலத்துடன் மோதிக்கொள்ளலாம். இதனால் இரு சாதியினருக்கும் இழப்பு தானே தவிர, எந்த சாதியும் சமுதாய முன்னேற்றத்தை காண முடியாது.

சாதியே வேண்டாம் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு (மன்னிக்கவும் தீயிட்டு எரித்துவிட்டு) பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீட்டை வழங்கும்படி குரல் கொடுங்கள். அப்போது தான் உண்மையான சமத்துவமும் சாதி ஓழிப்பும் வரும்.

சாதிய இட ஓதுக்கீடு என்பதற்காக சாதியை அங்கீகரித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றும் சாதிக்கலவரங்கள் புகைந்துகொண்டு இருக்கிறது.

சாதியே மனிதனுக்கு தேவையில்லை. சாதியை பயன்படுத்துவதே தேச துரோகம். சாதிபெயரில் கட்சிகள் இருக்க கூடாது. சாதி பெயரில் சங்கங்கள் இருக்ககூடாது. சாதி பெயரில் குழுக்கல் இருக்ககூடாது. சாதி பெயரில் இட ஓதுக்கீடுகள் இருக்ககூடாது. சாதியே இருக்ககூடாது என சட்டம் போட்டு பாருங்கள். அடுத்த தலைமுறையினருக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.

அது இல்லாமல் இன்னும் அரசியலுக்காக சாதியை, சாதி கட்சிகளை, சாதிசங்கங்களை, சாதி இட ஓதுக்கீடுகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் எந்த காலத்திலும் சாதியும் ஓழியாது, சாதிகள் சமத்துவமும் ஆகாது. இன்னும் சாதிவெறி தீவிரமாகி சாதிக்கலவரங்கள் தொடர்ந்து வெடிக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

சாதியை ஓழிக்க முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். இந்த ஓன்றை வைத்து தான் சட்டத்தின் முன் சவால் விட்டுக்கொண்டு சாதிய சங்கங்களும், சாதிய கட்சிகளும், சாதிய அரசியலும் கொடிகட்டி பறக்கிறது. சாதிய இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், அதை வைத்து எந்த சாதியையும் முன்னேற்ற எந்த சங்கமும் தேவைப்படாது. சாதியை ஓழியுங்கள். சாதியை ஒழிக்காமல் சாதிகலவரத்துக்கு வேறு தீர்வே இல்லை.


thanks - kulali.blogspot

Monday, November 24, 2008

Infosys - ஊழியர்களை கசக்கிப்பிழிய எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க


Infosys நிறுவனம் பெங்களூரில் அதிகரித்து வரும் peak time trafficஜ கட்டுப்படுத்த ஒரு அருமையான உபாயத்தை (so called "innovative idea") கொண்டு வந்துள்ளது. அதாவது அங்கு வேலை செய்யும் ஊழியர்களை முன்னதாகவே அலுவலகம் வர தூண்டுவதன் மூலம், காலை 9-10 மணிக்கு இடையில் ஏற்படும் traffic jamஜ மட்டுப்படுத்த போகிறார்களாம்.


இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்துக்கு 8 மணிக்கெல்லாம் வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 1.5 புள்ளியும், 8:30 மணிக்கு வரும் ஊழியருக்கு 1 புள்ளியும் வழங்குவார்களாம், மாதக்கடைசியில் 20 புள்ளி பெற்றுள்ள ஊழியர்களில் குலுக்கல் முறையில் தேர்வாகும் இரு ஊழியருக்கு தலா 12 ஆயிரமும், நான்கு ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

விரைவாக அலுவலகம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அவர்கள் அந்த ஊழியர்கள் விரைவாக வீடு செல்ல ஏதாவது ஏற்பாடு செய்துள்ளார்களா என்றா அது தான் இல்லை (நாராயண மூர்த்தி ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் இருக்க கூடாது என்று பக்கம் பக்கமாக அட்வைஸ் மழை மட்டும் பொழிவார்).

8 மணிக்கு அலுவலகம் வரும் ஊழியர் எனக்கு தெரிந்து குறைந்த பட்சம் 7 - 8 மணிக்கு முன்னர் வீடு திரும்ப இயலாது. ஏனெனில் ஜடி துறையினர் பெரும்பாலோனோர் வேலை செய்வது அமெரிக்க கம்பெனிகளுக்கு. status meeting, இந்த மீட்டிங் அந்த மீட்டிங் என்று தினமும் அவர்களின் அமெரிக்க காலை நேரம் 8 மணி வரையிலாவது அவர்களின் clients அலுவலகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதனால் ஊழியர்கள் குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது அலுவகத்தில் இருக்க வேண்டும். இவர்களின் அலுவலகம் பெரும்பாலும் ஊரை விட்டு வெகு தொலைவில் இருக்கும் உ.தா. Mahindra City, Electronic city. எப்படி தான் traffic இல்லை என்றாலும் அலுவலகம் செல்ல குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே ஒருவன் அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு தயார் ஆக ஆரம்பித்தால் வீடு திரும்ப இரவு 9 மணியாவது ஆகும். ஒரு சில வார இறுதி நாட்களும் வேலை செய்யும் படி இருக்கும். இப்படியே போனால் அந்த ஊழியனின் சொந்த வாழ்க்கை என்ன ஆகும்?

swipe card வேலை செய்தால் “அப்பாடா இன்னிக்கு வேலை காலியானவர்களில் என்னோட பெயர் இல்லை” என்று நினைக்கும் அளவிற்கு பணி நிரந்திரமும், cost cutting என்ற பெயரில் 10 பேர் செய்யும் வேலையை 3-4 பேரை வைத்து செய்ய வைக்கும் அவலமுமே சமீபகாலமாக கணிப்பொறியாளர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுத்திவருகிறது.இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழியர்களின் மன உளைச்சலை குறைக்கும் வழிகளை யோசிக்காமல் இது போன்று மேலும் மேலும் அவர்களை கொத்தடிமைகள் போல் வேலை வாங்க நினைத்தால் என்னவென்று சொல்வது? பளபளப்பான அலுவலகம், நினைத்தால் onsite, ஆயிரங்களில் சம்பளம் என்று பேராசைப்பட்டதற்கு இன்னும் எதையெல்லாம் அனுபவிக்க போகிறோமோ?

Traffic நெரிசலை குறைக்க வீட்டில் இருந்து வேலை செய்ய தூண்டுதல், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே பஸ்,கார் வசதிகள் அளிப்பதை தவிர்த்து எல்லா நிறுவனங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த போக்குவரத்தை(Integrated transportation) அளித்தல், அரசு அளிக்கும் public transportationஜ உபயோகிக்க ஊக்கப்படுத்துதல், carpooling என்று பல அருமையான யோசனைகள் இருக்கும் பொழுது ஊழியர்களை மேல் மேலும் exploit செய்ய நினைக்கும் இவர்களுக்கு எப்படியெல்லாம் யோசனை தோன்றுகிறது பாருங்க.

இந்த மொக்கை திட்டத்துக்கு stanford university, background research பஸ்களின் எண்ணிக்கை என்று டெக்னிகல் முலாம் பூசி அதை ஒரு அருமையான திட்டமாக்க முயற்சி செய்து இருக்காங்கன்னு
இங்க போயி பாருங்க.

Tuesday, November 18, 2008

I.T துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?


முதலில் I.T. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?

தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.


இத்தகைய சீர்கேடுகள் I.T. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.

I.T. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, Relax செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் news கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.


2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.

இது நிச்சயமாக I.T. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.


3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

I.T. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'Attrition' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு I.T. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.


4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.

I.T. துறையில் பணியாற்றும் அனைவரும் Group Insurance முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை(Claim) வழங்குகிறது.


5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.

இது எங்கும் எப்போதும் இருப்பதால், I.T. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.


Collective Bargaining

மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.

ஆனால் I.T. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் Bus,Car வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.

தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். I.T. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், Transfer,On-Site முதலிய சூழல்கள் உருவாகும்.

இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, I.T.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால், தற்போது I.T. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். I.T. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.

இந்த நிலையில், I.T. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு (savings) என்பது வேறு, முதலீடு (Investment) என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக(Fixed Deposit) இருக்கலாம். I.T. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Monday, November 10, 2008

ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்?மாற்றம். முடியும்! இந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்!’ - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.

தாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான். உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.

`அமெரிக்காவில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.

புது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.

நதிமூலம், ரிஷிமூலம்!

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர் பராக் ஹுஸைன் ஒபாமா.

அமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.

துல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

மிடுக்கு நிறைந்த கறுப்பர்!

நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான் முக்கியமான காரணம்.

ஒபாமா ஒரு முஸ்லிம்?

ஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ? திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

என்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண்டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.

புஷ் போட்ட `பாதை

இவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.

வாக்கும் கணக்கும்!

ஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.

ஈராக் : ப்ளஸ் புஷ் மைனஸ் புஷ்!

ஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
ஒபாமா Vs ஒஸாமா!

அடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.

பாகிஸ்தானின் எதிரி?

இதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
நமக்கு என்ன லாபம்?

இந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும்? ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.

ஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார்? அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது? அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார்? என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.
பிபிஓ என்ன ஆகும்?

அமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்கலாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.

வெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.
சரிந்த கோபுரங்கள் நிமிருமா?

முதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, அதற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

வழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.

Tax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்புஎன்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்!

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009