தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.
இத்தகைய சீர்கேடுகள் I.T. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.
I.T. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, Relax செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் news கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.
2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.
இது நிச்சயமாக I.T. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.
3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
I.T. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'Attrition' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு I.T. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.
4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.
I.T. துறையில் பணியாற்றும் அனைவரும் Group Insurance முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை(Claim) வழங்குகிறது.
5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.
இது எங்கும் எப்போதும் இருப்பதால், I.T. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.
Collective Bargaining
மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.
ஆனால் I.T. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் Bus,Car வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.
தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். I.T. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், Transfer,On-Site முதலிய சூழல்கள் உருவாகும்.
இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, I.T.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால், தற்போது I.T. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். I.T. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.
இந்த நிலையில், I.T. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு (savings) என்பது வேறு, முதலீடு (Investment) என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக(Fixed Deposit) இருக்கலாம். I.T. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
3 கருத்துக்கள்:
தங்களுடைய பதிவை வாசித்தேன். நீங்கள் சொல்லுவது என்னவென்றால், I.T. தொழிலாளியின் கோணத்தில் இருந்து, தொழிற்சங்கம் தீர்வாகாது என்பது. "தீர்வாகாது" என்பதை விருப்பத்துக்குரியதாகாது என்று சொல்வதே பொருத்தம். நீங்கள் கூறும் நடைமுறை யாவும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்கனவே வந்து விட்டது. அங்கே சாதாரண துப்பரவுத் தொழிலாளி அல்லது கட்டட தொழிலாளி கூட நீங்கள் கூறும் I.T. ஊழியரின் நிலைமையில் தான் இருக்கிறார். அவர்களுக்கும் தொழிற்சங்கம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்களும் நீங்கள் கூறும் நியாயங்களை தான் முன் வைக்கின்றனர். அந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்கள், அனைத்து தொழிலாளரின் உரிமைகளையும் கவனித்துக் கொள்கின்றன. அதனால் தான் சாதாரண தொழிலாளி அது பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறான். நீங்கள் சிறு பிள்ளையாக எந்தக் கவலையுமற்று வாழ்ந்த காலத்தில், உங்கள் தந்தை எல்லாப் பொறுப்பையும் தனது தலை மேல் போட்டுக் கொண்டு குடும்பத்தை பார்த்ததை நினைத்துப் பாருங்கள். I.T. நண்பர்களே, நீங்கள் இப்போதும் தந்தையின் நிழலில் வாழும் உலகம் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல பேசுகின்றீர்கள்.
நீங்கள் இங்கே தொழிற்சங்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதது தான் பிரச்சினை. அது தொழிலாளரை நிறுவனப்படுத்தும் அமைப்பு. தொழிலாளரின் நலன்களை மட்டும் காக்கும் அமைப்பு. இன்னும் விரிவாக சொல்கிறேன். நண்பரே! உங்கள் I.T. கம்பெனி முதலாளிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும் விடயம் தெரியுமா? அமெரிக்காவில் கூட எல்லா முதலாளிகளுக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் முதலாளிகளின் நலன் பேணும் சங்கம் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இது ஏதோ செங்கொடி காரரின் போதனை என்று பயந்து ஓடுகிறீர்கள். தவறு நண்பா, தவறு. உனது சிந்திக்கும் முறையை மற்ற வேண்டும். முதலாளிகள் எதற்காக தமக்கு தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர்? கொஞ்சம் சிந்தியுங்கள். தொழிற்சங்கம் என்பது குறிப்பிட்டவர்களின் நலன்களை பேணும் நிறுவனம். நீங்கள் நினைப்பதைப் போல அது ஒன்றும் கம்யூனிச சித்தாந்தம் அல்ல.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது. ஏனென்றால் அவன் உங்களிடமிருந்து சுரண்டும் பணத்தை சேர்த்து தான் கோடீஸ்வரன் ஆகின்றான்.
Trade Union a Must for All IT employees Now a days.
The Main reason for that.
Read all the lay offs, and job cutting news very carefully.
The main reason for all this actions told by all corporate Head is their profit margin is get reduced.
Note : they are not incurring loss, only their profit margin geting reduced.
This is totally unfair act.
If being a public sector company, can anybody say like this and cut jobs? Impossible. becouse trade unions are there to protect employees.
People should understand reward and risk.
When employer is making money more than employee because employer invested that means he took a risk of establishing business so he takes reward associated with it.
When the business goes under wanter, is there any employee provides money from his savings to the company to save company?
There is saying that there is no free lunch. Someone has to pay the bill. When the public sector does cut job, it is the taxpayer picks up the tab for payroll.SOMEONE HAS TO PAY.
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments