Monday, February 23, 2009

A. R. Rahman Oscar Award - ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கார் விருது


ஏஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருது

கவல்.தற்போது ஹாலிவுட்டில் கொடாக்(Kodak) அரங்கத்தில் நடைபெற்றுவரும் 81 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் Slumdog Millionaire திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்புக்கான பிரிவில் A.R.ரஹ்மான் ஆஸ்கர் வென்றார்.பலத்த கரவொலிகளுக்கு இடையே மேடையேறிய ரஹ்மான் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரஹ்மான் தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி விடைபெற்றார்

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்று சாதனை படைத்தார்.

81-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணியளவில் தொடங்கியது.

இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.

இவ்விருதை தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிப்பாதாக கூறியுள்ள அவருக்கு, உலக அளவில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றுள்ளார்.

கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஆஸ்கர் வழங்கியது.

இந்த நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்.

அவருடன், ஸ்லம்டாக் படத்தில் சவுண்ட் மிக்சிங்கிற்கான ஆஸ்கர் விருதைப் பெறுபவர்களில் ஒருவர், இந்தியாவின் ரெசுல் பூக்குட்டி என்பது பெருமைக்குரியது.

ஒரே படத்துக்காக, இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் ரஹ்மானையேச் சேரும். ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்ற மகத்தான பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட உயரிய விருதுகள் பலவற்றையும் வென்று, ரஹ்மான் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர்கள் விபரம்

சிறந்த படம்

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்

"ஜெய் ஹோ..." பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி

சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்

சிறந்த அடாப்டட் திரைக்கதை : சைமன் பியூஃபாய்

சிறந்த இயக்குனர் - டானி போய்ல்

சிறந்த எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்

Best Achievement in Music Written for Motion Pictures, Original Song
Winner: Slumdog Millionaire(2008) - A.R. Rahman, Sampooran Singh Gulzar("Jai Ho")

Best Achievement in Music Written for Motion Pictures, Original Score
Winner: Slumdog Millionaire(2008) - A.R. Rahman

ஆஸ்கார் அவார்ட் முழு விவரம்

Related Posts



2 கருத்துக்கள்:

Unknown on February 23, 2009 at 9:40 AM said...

Proud for all Tamilans.....Great Rahman

Unknown on February 23, 2009 at 9:45 AM said...

Proud for all Tamilans..... Great Rahman.... Great....

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009