Tuesday, September 30, 2008

இந்திய மென்பொருள் வல்லுனர்கள் தெருவில் நிற்கப் போகின்றனர்...


தேங்க்ஸ் அறிவிழி--

இந்தியாவில் மென்பொருள் துறையில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் கணினி பயிலும் பொறியியல் மாணவ மாணவியருக்கு அவர்கள் படித்து முடிக்கும் முன்பே வேலை, கை நிறைய சம்பளம், வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சலுகைகள் எல்லாம் கிடைத்து வந்தது.


வேலைக்கு சேர்ந்தவுடன் நான்கிலக்க சம்பளம் , குளிர்சாதன அறை, இருபத்திநான்கு மணி நேர இணைய வசதி, அலுவலக செலவிலேயே சுற்றுலா செல்ல வருடத்தில் ஒரு மாத சம்பளத்துடன் கூடிய விடுமறை ,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு சுற்றுலா என்று தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளால் திக்குமுக்காடி நிதர்சனம் என்ன என்பதை உணராமலே பலரின் வாழ்க்கையும் போய்க் கொண்டுள்ளது..


கையில் திடீரென கிடைத்த அதிகப்படியான சம்பளம் , இந்த இளைஞர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. அவர்கள் மேல்தட்டு வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்த விரும்பினர். விளைவு நகரின் உயர்தரமான உணவகங்களில் நடக்கும் இரவுநேர நடன நிகழ்ச்சிகள், கேளிக்கை விருந்துகள் என பணம் செலவழிக்கும் பல வழிகளையும் தெரிந்து கொண்டனனர்.


இன்று மென்பொருள்துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பலரும் நடுத்தரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களே , சென்னையை தவிர பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம். இவர்களில் பலரும் தங்களுக்கு கிடைத்த புதிய வாழ்க்கையினால் தங்களுடைய பழைய வாழ்க்கையை முற்றிலும் மறந்து போனதே வேதனையான விஷயம்.


இன்று மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களில் எத்தனை பேர் தங்கள் பெற்றோரை தங்களுடன் அழைத்து வந்து அவர்களை தங்களுடன் தங்க வைத்து , அவர்களுக்கு தாங்கள் பெரும் வருமானத்தினால் கிடைக்கும் உயர்தரமான வாழ்க்கையை கொடுத்துள்ளனர் ,அல்லது குறைந்தபட்சம் அப்படிச் செய்ய ஆசைப்பட்டனர் என்று பார்த்தால் மிகச் சிலரே அவ்வாறு உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னால் காவல்துறையினர் நடத்திய இரவுநேர சோதனைகளின் போது ஐந்து நட்சத்திர உணவகங்கள் சிலவற்றில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் இளைஞர்களும், இளம்பெண்களும் அளவுக்கு அதிகமான போதையில் தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருந்ததாக அவர்களை கைது செய்த போது அவர்கள் அனைவரும் படித்த மென்பொருள் வல்லுனர்கள் என்று தெரிய வந்த போது காவல் துறையினரே ஆடிப்போயினர்.

சென்ற குமுதம் இதழில் தாலியே தேவையில்ல .....என்ற தலைப்பில் வெளியான கட்டுரை , இன்னமும் மென்பொருள் வல்லுனர்களின் வாழ்க்கை எவ்வாறு சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது .


இப்படியெல்லாம் தங்களை பெற்றவர்களை பற்றியும் , சுற்றுபுறத்தை பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் கவலை அதுவும் இல்லாமல் வாழ்ந்து வந்த மேன்போருல்வல்லுனர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ள செய்திதான் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி ..


அமெரிக்காவின் ஊதாரி நிறுவனங்கள் கொட்டிக் கொடுத்த கோடிக் கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டுதான் நம்முடைய நாட்டில் மென்பொருள் நிறுவனங்கள் நடந்து கொடிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் நமது மென்பொருள் நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.


ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்கனவே சில நிறுவனகள் தொடங்கி விட்டன . அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வேறு தான் அமெரிக்க அதிபரானால் இந்திய நிறுவனங்களுக்கு தரப்படும் அவுட்சோர்சிங் முறையிலான வேலைகள் அனைத்தையும் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.


இக்தகைய சிக்கல்களினால் மென்பொருள்வல்லுனர்கள் வேலையிழப்பு அல்லது ஊதியக் குறைப்பை கண்டிப்பாக சந்த்திதுதான் ஆகவேண்டும் என்பது உறுதியாக தெரிகிறது , இத்தனை காலமாக தங்களுக்கு கிடைத்த அதிகமான சம்பளத்தில் உயர்தரமான வாழ்க்கைக்கு தங்களை பழக்கிக் கொண்டுள்ள மென்பொருள்வல்லுனர்கள்,இனி எப்படி தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.


ஆந்திராவில் உள்ள மென்பொருள்வல்லுனர்கள் திருப்பதியில் கூடி தங்களது வாழ்வைக் காக்க வேண்டி பிரார்த்தனை செய்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது . வளமான வாழ்வு கிடைக்கும் வரை பெற்றோரை கூட எண்ணிப் பார்க்காத இவர்கள் இன்று கடவுளை தேடி ஓடுவதை கண்டால் கண் கெட்ட பிறகு சூரியனை வணங்குவதாகவே தோன்றுகிறது.

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009