Friday, June 26, 2009

Michael Jackson died 25 jun 2009 - பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்


http://www.californiarumor.com/files/images/import/michael-jackson.jpg
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ( வயது 50) காலமானார். இருதய கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை காலை (உள்ளூர் நேரப்படி) 07:26 மணிக்கு காலமானார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போதே சுவாசம் நின்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினர் உடன் இருந்தனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக தற்போது கூறப்பட்டாலும் பிரேத பரிசோதனை நடத்திய பிறகே சரியான காரணம் தெரிய வரும். மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

சிறு வயது முதலே பாப் இசையில் சிறப்பிடம் பெற்று விளங்கிய மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்குழு அமைத்து பாப் இசையை ஆடிப்பாடத் தொடங்கிய ஜாக்சன் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதுடன் ஏராளமான பாப் ஆல்பங்களைங்களையும் உருவாக்கியுள்ளார்.

தனது முகத்தை பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்ட ஜாக்சன், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு - click here

இது பற்றி தட்ஸ் தமிழில் வந்த விரிவான செய்தி - click here

Read in English - Michael Jackson dead, Pop music legend

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009