இப்போது, இந்த கோஷம் வலுத்து வருகிறது. தொகுதியில் நிறுத்தப்பட்ட எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை எனில், யாருக்கும் ஓட்டு போடாமல் இருக்கலாம்; அதற்கு ஓட்டுச்சீட்டில் தனி பிரிவு அமைக்கலாம் என்று பலரும் யோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கோர்ட்டுகளிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது, ஆன்-லைனில் இந்த பிரசாரம் அதிகரித்து வருகிறது.

சில வெப்சைட்களில்ப்ளாக்' பிரிவுகளில் தன் கருத்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர். "பல நாடுகளில் நெகட்டிவ் ஓட்டு' உரிமை மக்களுக்கு உள்ளது. அவர்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் இருக்கலாம்.அதே சமயம், ஓட்டுரிமையை பயன்படுத்தவும் செய்யலாம். இதற்காக, ஓட்டுச் சீட்டில் கடைசி கட்டத் தில், யாருக்கும் என் ஓட்டில்லை' என்று எழுதப்பட்டிருக்கும். அதில், முத்திரையிட்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்' என்று "ப்ளாக்கில்' சிலர் கூறி, அதற்கு பல நாடுகளை உதாரணம் காட்டியும் உள்ளனர்.
கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வேட்பாளராக நிற்பதும், அவர்கள் எம்.பி.,யாக அமர்வதும், மந்திரியாவதும் வாடிக்கையாகிவிட்டது. "இப்படிப் பட்டவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு வேண்டுமா' என்று ஆவேசத்துடன் சிலர் கருத்து கூறியுள்ளனர்.ஆனால், அரசியல் சட்ட நிபுணர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியை, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் உள்ளது.
எதிர்மறையான நடவடிக்கையை வெளிக்காட்ட ஜனநாயகத்தில் இடமில்லை. ஆனால், கிரிமினல் வேட் பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வரும் நிலை துர திருஷ்டமானது தான். அதை தவிர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்தனர்.
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments