இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.
"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.
இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி - அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.
அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!
இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.
ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??
"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".
மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.
இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.
இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.
நன்றி - தமிழர் நேசன்
5 கருத்துக்கள்:
எல்லாவற்றையும் அரசே தீர்க்க வென்றும் என்பது குழந்தைத் தனமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது. ஒரு விவசாயிக்கு ஐந்து குழந்தைகள். இதில் ஐவரும் கிராமத்திலேயே இருந்து விவசாயம்தான் பார்க்க வேண்டுமா? அதில் இருவர் சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவது சரியாகத் தானே இருக்கும்.
விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். இதற்கு அரசு என்ன செய்ய முடியும்? அரிசி, கரும்பின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டுமா? இல்லை, எல்லா அரிசிக் கடைகளையும் அரசுடைமை ஆக்கி அதை நிர்ணயம் பண்ண வேண்டுமா?
இது போலவே எல்லாப் பிரச்னைகளையும் சிறுபிள்ளைத் தனமாக அணுகி இருக்கிறது உங்கள் கட்டுரை. விவசாயிகள் வேறு வேலை தேடிக் கொள்வது தவறு போலவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சொல்வேதேல்லாம் உங்கள் சாதிய ஆதிக்கத்தையே காட்டுகிறது.
ஒரு பக்கம் விவசாயத்தில் லாபம் குறைகிறது என்கிறீர்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளும் விலை நிலங்களும் குறைகிறது என்கிறீர்கள். பொருளாதாரத் தத்துவத்தின்படி விவசாயிகள் குறைந்து உற்பத்தி குறைந்தால் விலை மற்றும் லாபம் ஏறிவிட்டுப் போகிறது. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
Excellent comment.Quite true.Lots of fertile lands in Tanjore and delta regions are being acquired and converted into housing plots or for factories.This has to be avoided.Withe the advent of Dravidian rule in Tn they systematically decimated percolation ponds in cities like Madurai to develop slums with an eye on election as they felt educated or upper caste people would not vote for them.This also created other problems once the elections were over as they had no livelihood in cities,they indulged in rowdyism and petty thefts.No one thought of such problems like water table going down or these sort of crowding in cities as parties lacvked vision or foresight
kk said...
//இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?// kk(?!) அவர்களே! அரசு செய்ய முடியும், கரும்புக்கு அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கு தான் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா?? விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு அரிசி முதலியன வாங்கும் தரகர்கள், அவற்றை பதுக்கி வைத்து சந்தையில் ஒரு போலியான தட்டுப்பாடு (virtual scarcity) ஏற்ர்ப்படுத்துகிறார்கள். பின்பு தேவை அதிகரித்தவுடன், (பொருளாதார மேதவிகள் இங்கு சொல்லி இருப்பதை போல்) தாங்கள் பதுக்கி வைத்திருக்கின்ற அத்தியாவசிய பொருட்ட்களை கொள்ளை லாபத்திற்கு விற்கின்றனர். இதை தடுப்பதற்கும் அரசு இயந்திரம் உள்ளது kk!! ஆனால் அவை ஆயில் போடும் இடைத்தரகு முதலைகளுக்கே சாதகமாக செயல்படும்... இதை தடுக்க முடியுமா முடியாதா?? விவசாயி என்ன செய்வான், உழைப்பான், நல்லது நடக்கும் என்று ஊட்டு போடுவான், வேலியே பயிரை மேயும் போது யாரை கேட்கச் சொல்கிறீர்கள் kk??
//விவசாயிகள் வேறு வேலை தேடிக் கொள்வது தவறு போலவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சொல்வேதேல்லாம் உங்கள் சாதிய ஆதிக்கத்தையே காட்டுகிறது.//
சாதியா?? இதில் சாதி எங்கே ஐயா வந்தது?? ஒரு பொதுவான முக்கியமான பிரச்சனையை பேசும்போது, அதற்க்கு தீர்வு என்ன என்று எண்ணாமல், எப்போது சாதி என்று சொன்னீரோ அப்போதே தெரிகிறது நீர் யார் என்பது!! விவசாயிகள் வேறு வேகலை தேடுவது தவறல்ல. ஆனால் வளமான விவசாயம் உள்ள இடங்களில் உள்ள தொழிலாளர்களை தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்(வருடத்தில் 100 நாள் வேலை) என்று கூறி, அனேகமாக பலன் இல்லாத வேலைகளை அரை நேரம் தந்து உள்ளூர் விவசாயக் கூலியை விட உயர்த்தி தந்து, ஊரில் உள்ளவர்களை சோம்பேறி ஆக்கி, மக்கள் வரி பணத்தை வாரி இரைத்து, மறை முகமாக விவசாய தொழிலை நலிவடைய செய்யும், சுயநலவாதிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டு, தங்கள் சுய விளம்பரங்களை அங்கு செய்து அடுத்த முறை அரசியல் வெற்றி பெற திட்டம் போடும் ஆட்சியாளர்களை குற்றஞ் சுமத்துகிறது இந்த கட்டுரை...
அதே போல, 'வேறு' வேலை விவசாயத்தை விட உயர்ந்ததா உங்கள் அகராதியில்?? உணவு உண்ணும் முன் ஒரு முறை இதை சிந்தித்து பாரும்...
அனானிகள் தங்கள் பெயரை குறிப்பிட்டு எழுதினால் பதில் அளிக்க வசதியாக இருக்கும்..
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments