Saturday, March 07, 2009

Rajini Voice in 2009 Election - தேர்தல் : ரஜினி முடிவு என்ன ?


பொதுத் தேர்தல்களும் - ரஜினி பற்றிய அரசியல் எதிர்பார்ப்பும்


தோ தேர்தலை அறிவித்துவிட்டார்கள். பரபரப்பு ஸ்டார்ட் ஆகிவிட்டது. தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் மற்றும் புலனாய்வு இதழ்களின் அடுத்த வழக்கமான சம்பிரதாயம்ரஜினி வாய்ஸ் யாருக்கு?” என்று தலைப்பிட்டு தங்கள் இஷ்டத்துக்கு எழுதித் தீர்ப்பது தான்.

rajii-elections-bj

ஒரு பத்திரிக்கையாக மேலே சொன்னபடி எழுத அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் அப்படி எழுதுவதன் உள்நோக்கம் தான் நாம் கவனிக்கவேண்டியது.

நேரடியாக அரசியலுக்கு வராமல் அரசியல் பற்றிய எதிர்பார்ப்பு 13 வருடங்களாக ஒருவர் மீது இருக்குமானால் அது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் இதுவரை ரஜினி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பரப்பரப்பு அனைத்தும் ஜஸ்ட் வெறும் அறிக்கை மற்றும் தொலைகாட்சி பேட்டிகள் மூலம் மட்டுமே என்பது நினைவுகொள்ளத் தக்கது. அவர் எந்த சூழ்நிலையிலும் மக்களை இதுவரை நேரடியாக சந்திக்கவில்லை என்பதை “ரஜினி வாய்ஸ்” குறித்து அவ்வப்போது ஆதங்கப்படும் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் நினைவில் கொள்ளவேண்டும்.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் சுருக்கமாக அதே சமயம் சரியாக இன்றைய மாலை மலர் தந்திருக்கிறது. முதல் இரண்டு பாராக்கள் சூப்பர்.

“ரஜினியிடம் அரசியல் இல்லை. ஆனால் அவரை சுற்றி அரசியல் உண்டு.” - வைரமுத்து.

Over to Maalai Malar (06/03/09)

பாராளுமன்ற தேர்தல் ரஜினி ஆதரவு யாருக்கு?

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ரஜினி ஆட்டி வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. விரல் அசைவுக்காக காத்திருக்கும் ரசிகர் படை தமிழ் மக்கள் அளித்துள்ள சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றால் அவரது ஆதரவை பெற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வரிந்து கட்டுவது உண்டு.

ரஜினி கட்சி துவங்கி அரசியலில் ஈடுபட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தல்கள் தொடர்கிறது.. இவ்விஷயத்தில் அவர் தொடர்மவுனம் கடைபிடிப்பதால் தேர்தல்களில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆறுதல் படுகின்றனர்.

1996-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக அரசியல் களத்தில் பிரவேசித்தார் அ.தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக கருணாநிதி, மூப்பனாரை நேரில் சந்தித்து தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 1998 தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். ஒரு வருடத்திலேயே அ.தி.மு.க-வால் மத்திய அரசு கவிழ்ந்தது. 1999-ல் தேர்தல் நடந்த போது பல கட்சிகள் ரஜினி ஆதரவை நாடி தூதுவிட்டன. ஆனால் எக்கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.. நடுநிலைமை வகித்தார். ரசிகர்கள் தனது படங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது எனவும், தடை விதித்தார்.

ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தலில் நிலைப்பாடு மாறியது. பா.ம.க-வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அக்கட்சிக்கு எதிராக இறங்கினார்.. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் எதிராக ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்றார். அதோடு நதி நீர் இணைப்பை நிறைவேற்றுவதாக அறிவித்த பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போடுவேன் என்றும் வெளிப்படையாக சொன்னார். அது போல் ஓட்டும் போட்டார்.

ஆனால் 2006 சட்ட சபை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் மீண்டும் மவுனம். அவரது படங்களுடன் சென்று பிடித்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்த ரசிகர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போதைய தேர்தலில் ரஜினி நிலை என்ன என்று ரசிகர்களும் அரசியல் கட்சியினரும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கின்றனர். மறைமுகமாக சில கட்சிகள் அவரது ஆதரவை கேட்டு தூது அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படங்கள், ரசிகர்மன்ற கொடிகள் போன்றவற்றுடன் சென்றால் கூடுதல் வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.

ரஜினி ஏதேனும் கட்சியை ஆதரிப்பாரா அல்லது நடுநிலைவகிப்பாரா என்பது இன்னும் ஒரிருவாரத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முடிவை ரசிகர்மன்ற தலைவர் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் மூலம் விரைவில் தெரிவிப்பார் என்று ரசிகர்மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

நன்றி - onlysuperstar.comRelated Posts3 கருத்துக்கள்:

krishnaaleelai on March 7, 2009 at 12:30 PM said...

கலைஞர் கருணாநிதி இருக்கும் வரை அரசியல் பக்கம் வரமாட்டார் ரஜினிகாந்த்

Superstar in Enthiran on March 8, 2009 at 3:50 AM said...

I think soon he will come to politics after his next blockbuster enthiran (the robo). He may announce this on his social network http://www.rajinis.com i guess to all his fans around the world

newspaanai on March 9, 2009 at 6:52 AM said...

Please add your blog articles in www.newspaanai.com and share it with other readers worldwide. www.newspaanai.com is a tamil social bookmarking website where in you can post articles in english/tamil. For easy adding of your articles please visit http://www.newspaanai.com/easylink.php

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009