"நான் நடித்துக் கொண்டிருக்கும் வாமனன் படம் பெரிய ஹிட் ஆகும். ஆனால், அதற்கு பிறகு வரப்போகும் என்னுடைய இரண்டு படங்கள் பெரிய ஃபிளாப் ஆகும்" இதுதான் ஜெய்யின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். பல கோடிகள் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை பற்றி ஏதாவது நான்கு வரி செய்தி தவறாக வந்தால் கூட, அதிர்ந்து போய்விடுவார்கள். ஏனென்றால், விநியோகஸ்தர்கள் படத்தை வாங்காமல் போய்விட்டால் என்னாவது? ரசிகர்கள் தியேட்டருக்குள் வராமல் போய்விடுவார்களோ? இப்படியெல்லாம் நாலு வரி கிசுகிசுவுக்கே அஞ்சும் தயாரிப்பாளர்கள், படத்தின் ஹீரோவே இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தினால் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

இவர் கொடுத்த பேட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக இதுபற்றி விவாதித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், ஜெய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கோவா படப்பிடிப்பை உடனே நிறுத்த சொல்லிவிட்டதாம். குறைந்தது ஆறு மாதங்களாவது ஜெய்யுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களோடு நகர்கிறது நேரம்.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு நாளை அவசரமாக கூட்டப்படுகிறது. ஜெய்யின் தலை எழுத்தை நாளை முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது.
குறிப்பு: ஜெய் ஏற்கனவே மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை பண்ணியது நினைவிருக்கலாம்!
வாமணன் பட முழு விவரம்
1 கருத்துக்கள்:
MIND YOUR WORDS JAI
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments