Wednesday, January 21, 2009

ஒபாமாவின் ரூ 2.2 கோடி கார்


அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமா பயன்படுத்தும் காரில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. அதன் விவரம்

18 அடி நீளமும், 5 அடி அங்குலம் உயரமும் கொண்ட இந்த கெடிலாக் நிறுவன சொகுசு காரின் விலை ரூ 2.2 கோடி

அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் செல்லும் இந்த காரில் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது

புறப்பட்ட 15 வது வினாடியில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கும்

ஒரு லிட்டர் டீசலுக்கு 2.8 கி.மீ தூரம் தான் செல்லும்

இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரை குண்டு துளைக்காமல் இருக்க ஸ்டீல், அலுமினியம், டைட்டானியம் கலந்த தகடு பொருத்தப்பட்டுள்ளது

கண்ணி வெடி வெடித்தாலும் சேதம் ஏற்படாமல் தடுக்க 12 செ.மீ கனமான தகடு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கார் கதவுகள் முக்கால் அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஏவுகனை வீசி தாக்கினாலும் சேதமடையாத டீசல் டேங்க் காரில் பொருத்தப்பட்டுள்ளது

தீயணைப்பு கருவிகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் காரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

டயர்கள் வெடித்தாலும் தொடர்ந்து காரை ஓட்டலாம்

ட்ரைவர் சி.ஐ.ஏ வால் பயிற்சி அளிக்கப்பட்டவர். தீவிரவாத தாக்குதல் உட்பட எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையிலும் வேகமாக வண்டியை ஓட்ட அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

நம்பர் பிளேட் பகுதியிலும், பக்கவாட்டிலும் இரவிலும் தெளிவாக படம் எடுக்க கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியின் உதவியுடன் கார் எங்கு இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கலாம்

பின் பகுதியில் உள்ள இருக்கையில் ஒபாமா உட்கார்ந்து இருப்பார். அவருக்கு முன் இன்டெர்நெட் வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. மேலும் ஒரு செயற்கைகோள் தொலைபேசியும், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் உடனடியாக பேச தொலைபேசிகளும் வைக்கப்பட்டுள்ளது

ஆபத்து காலத்தில் உதவுவதற்காக ஒபாமாவின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும் ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் வைக்கப்பட்டிருக்கும்


நன்றி தினகரன்
நன்றி - கிரி

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009