ஏஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருது கிளிக் செய்க
"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா?
கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா'
இந்தியாவின் சந்தோஷம்!
இந்தியாவின் ஆனந்தம்!!
இந்தியாவின் பேருணர்ச்சி!!!
ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.
அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. A.R.Rahmanஎல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்பாக இந்த செய்தியை வெளியிட்டன.
1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமை பேசுகிறார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக பெற்றிருக்கிறார் ரஹ்மான்.
ஆனால் இவ்வளவு சந்தோஷமும், திருமங்கலம் வேட்டு சத்தத்தில் அமுங்கிப் போனதுதான் துரதிருஷ்டம். தமிழ் சேனல்களில் பலவற்றை ஆக்ரமித்துக் கொண்டது இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களும்தான். அட, இதுவாவது போகட்டும். விருதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை. நல்லவேளையாக ரஹ்மான் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு விருது ராஜாவை அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு வரை அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது?
இருந்தாலும் சற்று தாமதமாகதான் திரையுலகத்தை சேர்ந்தவர்களும், அரசியல் Golden Globe Awardதலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.
தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. (மற்ற இசையமைப்பாளர்கள் யாருக்கும் மனசே வரவில்லை போலிருக்கிறது)
இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும், தன்னை சூழ்ந்து கொண்ட ஆங்கில Golden Globe Awardபத்திரிகையாளர்களிடம் ரஹ்மான் கேட்ட ஒரே கேள்வி "தமிழ் பத்திரிகைகளிலிருந்து யாரும் வரலையா?" என்பதுதான். என்றாலும், மறுநாள் தமிழ் பத்திரிகைகள் சார்பாக சில நிருபர்களை சந்தித்தார் இசைப்புயல்! ஏராளமான கேள்விகள். எல்லாவற்றுக்கும் தனது இசையைப் போலவே இனிக்க இனிக்க பதில் சொன்னார் தனக்கு பின்னால் நடக்கும் கசப்பான ஒரு விஷயத்தை ஜீரணித்துக் கொண்டே! மறந்தும் கூட இவர்களிடம் அதுபற்றி வாய் திறக்காத ரஹ்மான் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் வேதனையோடு குறிப்பிட்டாராம் இப்படி...
"நான் ஆஸ்கர் விருதை வென்று விடுவேனோ என்று அஞ்சுகிற சிலர் எனக்கு எதிராக புரளிகளை கிளப்பிவிடுகிறார்கள்"
தயங்கி தயங்கி இந்த வார்த்தையை அப்படியே நம் காதிலும் போட்டார் நண்பர். எந்த Slumdog Millionaireமாதிரியான புரளிகள் என்பது குறித்து மேலும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அதே நண்பர். "ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருது, ஒரிஜனல் இசைக்கான விருது. ஆனால், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு ரஹ்மான் ஒரிஜனலாக இசையமைத்தது ஐந்தே டிராக்குகள்தான் என்றும், மற்ற டிராக்குகள் எல்லாம் ஏற்கனவே அவரால் பயன்படுத்தப்பட்டவை" என்றும் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் எல்லா டிராக்குகளும் ஒரிஜனலாக இந்த படத்திற்கென்றே உருவாக்கப்பட்டது. அதுவும் லண்டனில் ரஹ்மானுக்கு சொந்தமான வீட்டிலிருக்கும் இசைக்கூடத்தில் இருபதே நாட்களில் உருவாக்கப்பட்டது" என்று கவலையோடு சொன்னார் அந்த நண்பர்.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு இந்த படத்தை அனுப்பும்போது படத்திற்கு விருது A.R.Rahmanகிடைத்தாலும், இசைக்கோ, இசையமைப்பாளருக்கோ விருது கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு கிளப்பி விடப்பட்ட வதந்திதானாம் இது. ஏனென்றால் ஒரிஜனல் இசை டிராக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே விருது கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார் ரஹ்மான். மீடியாக்களின் கருத்தும் இந்த கமிட்டியால் பரிசீலிக்கப்படும் என்பதால், இதை திட்டமிட்ட சதியாகவே கருதுகிறாராம் ரஹ்மான்!
கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் வென்றவுடன் முதலில் கொண்டாடிய இதே மும்பை மீடியாக்கள் மூலமாகதான் இப்படி ஒரு தகவலும் பரப்பப்படுகிறதாம். சிஎன்என் சேனலில் ராஜிவ் மசந்த் என்பவர் ரஹ்மானின் கோல்டன் குளோப் விருது குறித்து எழுப்பிய விமர்சனங்களில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிற சேனல்களும் இதே கருத்தை வழி மொழிய துவங்கியிருக்கிறார்களாம்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறாராம் ரஹ்மான்.
ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக்... காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.
நாற்பத்தி மூன்றே வயதில், ரஹ்மான் சாதித்தது ஏராளம். இவரது ஆடியோ சிடிக்கள் இதுவரை 200 மில்லியனுக்கு மேல் விற்றிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விபரம். அகத்தியனுக்கு வழங்கியதை போல ரஹ்மானுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டால், அதுவே ஆயிரம் ஆஸ்கருக்கு சமம்!
செய்வீர்களா தோழர்களே!
டெயில் பீஸ்-
ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் குடிசைப் பகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தபேஸ்வர் விஸ்வகர்மா என்ற வழக்கறிஞர். நடிகர் அனில் கபூர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை ரஹ்மானுக்கு எதிரான சதியோடு இணைத்து பார்க்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி- தமிழக அரசியல் வார இதழ்
4 கருத்துக்கள்:
An Indian won't appreciate another Indian.....REHMAN'Z award will ever cherish in all Indian music lovers heart.
In tamilnadu the soo called maestro ilyaaraja is the best in the world...b'coz all these years he has composed music for tamil films all alone himself without any strong contenters...todays fastpaced industry is like multitasking,composing ,scoring background commitment to musical is hardtask.Musci industry everyone is competiting with one another...not like the good old Ilayaraja's days where one can take hell a lot of time to compose and chit-chat.
So thats why rehmans way of work is much appreciated globaly
yes u r saying correct..we will surely keep and safe our oscar rahman..no one has will tough our legand
ar rahman wishes by tom cruise.......
I HAVE NO WORD TO CONGRADULATE U LEGEND,I AM AMASED BY UR SIMPLICITY.WISHES TO U,I CAN PROUDLY SAY THAT MY RAHMAN GOT OSCAR.THANK U OSCAR TEAM.
BY.UR EVER FAN ASOKAN GOKULAN FR JNCOE
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments