Friday, January 30, 2009

I.T. Engineers in Hotel - ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?


ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை...

முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!

சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...

முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..

மாஸ்டர் ஒருவரிடன் சென்று....

மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...
அவன் : நான் PM ஆ இருந்தேன்..

மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...????
அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.

மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....
PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....

மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...
PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.

மாஸ்டர் : நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.

PM : இது பேரு தான் ப்ளானிங்....
மாஸ்டர் : அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...

ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.

மாஸ்டர் : தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....
டெவலப்பர் : சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.

மாஸ்டர் : சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....
டெவலப்பர் : யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,

மாஸ்டர் : விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....

இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.

மாஸ்டர் : நீ என்னவா இருக்க....?
அவன் : டெஸ்டரா இருக்கேன்.

மாஸ்டர் : ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...
டெஸ்டர் : கலர் பார்க்குறேன்.

மாஸ்டர் : எதுக்கு...??
டெஸ்டர் : இத Sanity Testingனு சொல்லுவாங்க...

அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.

மாஸ்டர் : இதுக்கு என்ன பேரு....??
டெஸ்டர் : Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...

டெவலப்பர் : நான் சரியா தான் போட்டேன்.
டெஸ்டர் : நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....

மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.

சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.

டெஸ்டர் : ரொம்ப காரம்மா இருக்கு...

மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.
டெஸ்டர் : இப்ப நல்லா இருக்கு...

டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.

மாஸ்டர் : எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...
டெஸ்டர் : இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.

மாஸ்டர் : அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....

மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.

முதலாளி : என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....
மாஸ்டர் : இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.

ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.

முதலாளி : ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?
மாஸ்டர் : ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...

முதலாளி : $$@#$@##$

( ஐ.டி ஊழியர்கள் யாரும் என்னை திட்ட வேண்டாம். நானும் ஒரு ஐ.டி. ஊழியன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். )

நன்றி - குகன்

Related Posts



3 கருத்துக்கள்:

Anonymous said...

cool....

பிரேம்குமார் அசோகன் on February 11, 2009 at 12:54 PM said...

என்ன க்க்க்கொடுமை இது...

Anonymous said...

vry nice

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009