இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.
"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.
இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி -
அகிம்சை போதித்த
இந்தியா பல விதமான
பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.
அதே போல,
அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய
தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!
இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.
ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??
"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான
கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".
மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.
இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.
இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.
நன்றி -
தமிழர் நேசன்