இதற்கிடையே ரஜினி-ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த 'ரோபோ'வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான். வில்லன் கையில் சிக்கிய 'ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்துவிடுகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் காதல் உட்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடுகிறது. ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே 'அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப்படுகிறது. எந்திரன் 'ரோபோ' ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். 'ரோபோ'வுக்கு 'அவுட்டோர்' சூட்டிங் கிடையாது. இந்த 'ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பலவகை அட்டகாசங்களைச் செய்கிறது. 'ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது 'இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல்படி ஆடும் 'ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது. ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடும் ஒரு காதல் காட்சி 'கம்யூட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது. இந்தப்படத்தில் ஏ,ஆர்.ரகுமான் இதுவரை இல்லாத அளவுக்கு இசையில் 'காமெடி' கலந்து பல புதுமையான டியூன்களை உருவாக்கி உள்ளார். 'எந்திரன்' 2010ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ் விக்கும் வண்ணம் உருவாகிவருகிறான்.