

எதனால் இந்த தவறான அரசியல்வாதிகள் உருவாகுகிறார்கள் என்று பார்த்தால் , லட்சியத்திற்காகவும் , உரிமைக்காகவும் மற்றும் பொதுநலனிர்க்காகவும் போராடும் அல்லது பாடு படும் அரசியல் வாதிகள் இல்லாததுதான் காரணம். அப்படியே அவர்கள் தோன்றினாலும் சில காலத்துக்குள் தங்களுக்கு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய அரசியல் கட்சிகளிடம் விலை போய்விடுகிறார்கள். அல்லது இவன் வளர்ந்துவிட்டால் பெயர் வங்கிவிடுவானோ என்ற காரணத்திற்காக மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் மீது அவதூறுகளை பரப்பி மற்றும் பொய்யான வழக்குகளை புனைந்து , மக்களிடம் நல்ல அரசியல்வாதிகளின் கருத்துகள் சென்று விடாமல் மட்டம் தட்டிவிடுகிறார்கள்.
இவைகளுக்கு எல்லாம் காரணம் என்று பார்த்தால் , நம்மை ஆளுகின்ற அரசியல்வாதிகளும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையான கருத்துகளை சொல்பவர்களும் , உரிமைக்காகவும் போராடுபவர்களும் தண்டிக்கபடுகிறார்கள் , எதனால் என்று பார்த்தால் ஆட்சி செய்பவர்களுக்கு உண்மை பிடிப்பது இல்லை. நம்மை ஆளுபவர்கள் கொள்ளை அடிப்பவர்களும் , சுயநலவாதிகலாகவும் மற்ற எதையும் பற்றி சிந்திக்காதவர்கவும் , தங்களின் பதவி சுகத்திற்க்காக இன உணர்வு , மானம் , இலட்சியம் எல்லாத்தையும் இழக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.

எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகளிடம் நாம் உண்மை , நேர்மை லட்சியம் என்று பேசினால் அவர்களுக்கு புரியாது. அமைச்சர்களாக இருப்பவர்களின் பின்னணிகளை பார்த்தால் அவர்கள் தலைமை வகிக்கின்ற துறைக்கும் எந்த விதமான சமந்தமும் இருக்காது, கல்வி தகுதியும் இருக்காது பிறகு எப்படி இவர்களிடம் நாம் ஒழுங்கான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். அரசியல் வாதிகளுக்கு அல்லது அமைச்சர்களுக்கு எதாவது குறைந்த பட்ச கல்வித்தகுதியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இதற்க்கு முன்னால் ஒரு சில படிக்காத மேதைகள் அமைச்சர்களாக இருந்ததை மேற்க்கோள் காட்டி சாக்கு போக்கு சொல்வார்கள்.
ஒரு அரசியல்வாதி எப்படி உருவாக வேண்டும் என்று பார்த்ததால் அனுபவத்தின் மூலமாகத்தான் வரவேண்டும் . தான் சந்திக்கும் பிரச்சனை , ஒரு சமுதாயம் சந்திக்கும் பிரச்சனை அல்லது ஒரு பிரிவினர் சந்திக்கும் பிரச்சனை, ஒரு இனம் சந்திக்கும் பிரச்சனை, செல்லுகின்ற இடங்களில் எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்கள் , நாட்டிற்க்கு எதிராக நடக்கும் செயல்கள் , ஒரு சாதரண குடிமகன் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் , சிறுபான்மை மக்கள் ஆதிக்க சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் பார்த்து ஒரு மனிதனின் மனது துடித்து இவர்களுக்காக சாதிக்க வேண்டும் என்று துடித்து ஒருவன் எழுகின்றானோ, அவனிடம் இருந்துதான் உண்மையான ஆக்கபூர்வமான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். நல்ல செயல்கள் செய்யும் பொழுது பயங்கர எதிர்ப்புகள் பிரச்னைகள் வரத்தான் செய்யும் அவைகளை எல்லாம் தாண்டித்தான் வரவேண்டும்.

நன்றி - மக்களை தேடி - Dominic Panneer Selvam
இவர் ஒரு நல்ல எழுத்தாளர் அவசியம் பதிவுகளை படிக்கவும்
2 கருத்துக்கள்:
good
நன்றி சங்கர், உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி.
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments