Tuesday, December 16, 2008

மென்பொருள் நிறுவனத்தில் அரசியல்வாதிகள்


இருக்குற மென்பொருள் ஆளுங்களுக்கே எப்ப ஆப்புன்னு தெரியாம இருக்கும் போது, அவுங்க எப்படி வருவாங்கன்னு லாஜிக் பேச கூடாது. அரசியலும் ஒரு வேலைன்னு இருக்குறவுங்களுக்கு, எந்த வேலையா இருந்தா என்ன?


மேனேஜ்மென்ட் (Management)

கம்பெனியின் மொத்த நிர்வாகத்தையும் தமிழின தலைவர் கிட்ட கொடுத்திடணும். அப்பத்தான், கம்பெனி நல்லா வளரும். பல இடங்களில் பிராஞ்ச் ஆரம்பிக்குறதுல எக்ஸ்பெர்ட். இவர்கிட்ட, யாராச்சும் சிபாரிசில் வேலை கேட்டு சென்றால், "என் இதயத்தில் ஏராளமாக இடம் கொடுத்திருக்கும் உனக்கு எதற்கெடா கண்மணி இந்த மூணுக்கு நாலு அடி இடத்தின் மீது ஆசை?" அப்படின்னு கேட்டு எஸ்கேப் ஆகிடுவாரு. அடுத்த எம்.பி. யாருன்னு போர்டு மீட்டிங்ல தான் முடிவு பண்ணுவோம்னு சொன்னாலும், அது யாருன்னு ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும்.

மனிதவள மேலாளர் (Human Resources)

மேனேஜ்மேன்ட்க்கு ஒரு நல்ல அனுபவஸ்தர் இருக்காரு. இந்த இடத்துக்கு பொருத்தமான ஆளு, தலைவிதான். ஊழியர்கள சேர்க்கும் போது, ரொம்ப கனிவா பேசுவாங்க. சேர்ந்ததுக்கு அப்புறம் இவுங்கள பார்க்கவே முடியாது. எப்பவாச்சும் ஏதாச்சும் அவுங்களுக்கு தேவைன்னா வருவாங்க. அப்புறம், ஒவ்வொரு அப்ரைசல் மீட்டிங் அப்ப மட்டும் வருவாங்க. மத்த நேரம் எல்லாம், ரெஸ்ட் எடுக்க எங்காச்சும் போய்டுவாங்க. அதுக்காக எப்பவும் அப்படின்னு சொல்ல முடியாது. திடீர்ன்னு மேனேஜ்மென்ட் கிட்ட போயி, கேண்டீன்'ல தண்ணி வரலைன்னு கம்ப்ளைன் பண்ணுவாங்க. துறையில் தேக்கநிலை ஏற்படும்போது, இவுங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்'ஆ இருப்பாங்க. ஒரே நாள்லே எத்தினி பேர வேணா கம்பெனியில இருந்து தூக்கிடுவாங்க.

டெவலப்பர் (Developers)

இதுக்கு கொஞ்சம் நல்லா திங்க் பண்ணனும். சுப்பிரமணிய சுவாமின்னு ஒருத்தர் இருக்காரு. நல்லா யோசிப்பாரு. பட், ரிசல்ட் ஒழுங்கா வராது. கல்குலேசன் லாஜிக் ரொம்ப இருந்திச்சின்னா, சிதம்பரம்ன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட கொடுத்திடலாம். என்ன பிரச்சனைனா, எங்க ஊர்லதான் இந்த சாப்ட்வேர முதல்ல இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லுவாரு. உண்மையிலே இந்த வேலையில இருக்குறவுங்க நேரம் காலம் தெரியாம வேல பார்க்கணும். இதுக்கு அரசியல்வாதிகள் எல்லாம் லாயக்கில்லை. தொண்டர்கள் தான் சரி. எலக்சன், பொதுக்கூட்டம் போது பிரியாணி கொடுக்குற மாதிரி, ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப, பீட்சா வாங்கி கொடுத்தா, வீடு உறவெல்லாம் மறந்து வேல பார்ப்பாங்க.

டெஸ்ட்டர் (Testing Team)

டெவலப்பர் பண்றதுல எல்லாம் குத்தம் கண்டு பிடிக்குற மாதிரி ஆள் தேவை. அதே சமயம், குத்தம் இல்லாத மாதிரி பண்றதுக்கான திறமையும் தேவை இல்லை. இந்த வேலைக்கு அப்படி ஒரு ஆள் தேவை. கேப்டன்னு சொல்லிட்டு ஒரு ஆள் இருக்காரு. அவருதான் இதுக்கு சரி. அப்படி என்ன வேல பாப்பாரோ தெரியல, எப்பவும் கண்ணு ரெண்டும் செவப்பா இருக்கும். சில சமயம், சாப்ட்வேர் ஒழுங்க ஓடும்போது, இதுக்கு ஐடியா நான்தான் கொடுத்தேன் சொல்லுவாரு பாருங்க, அதுல்லாம் கொஞ்சம் ஓவர் தான். தவிர, பத்திரிகையாளர்கள் சிலர் இருக்காங்க. சோ, ஞாநிங்க்ற பேரு வச்சிட்டு விமர்சனம் பண்ணுறேன்னு அதிகமா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க. அவுங்களையும் யூஸ் பண்ணிக்கலாம்.

மார்க்கெட்டிங் / சேல்ஸ் (Marketing & Sales)

மாறன் பிரதர்ஸ்னு அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்காங்க. இந்த துறைக்கு அவுங்களைவிட பொருத்தமா யாரும் கிடைக்கமாட்டாங்க. தம்பிக்காரரு நல்லா ப்ராஜெக்ட் பிடிச்சிட்டு வருவாரு. பில் கேட்ஸ் வரை தொடர்பு இருக்கு. மார்க்கெட்டிங் துறைக்கே மிகவும் அவசியமான விளம்பரத்தின் மீது ரொம்ப ஆர்வம் இவருக்கு. எந்த கிளையண்ட மீட் பண்ணினாலும் சிரிச்ச முகத்தோட ஒரு போட்டோ எடுத்துக்குவாரு. ப்ராஜெக்ட் பிடிக்குறதுல இவர் கில்லாடின்னா, பண்ணுன பிராடக்ட விக்குறதுல இவரு அண்ணன் ஜெகதால கில்லாடி. எவ்ளோ மோசமான பிராடக்டா இருந்தாலும், பஞ்சர் பாத்து, டிங்கரிங் செஞ்சு எப்படியோ விளம்பரம் பண்ணி வித்துட்டு வந்திடுவாரு.

பெஞ்ச் ரிசோர்ஸ் (Bench Resources or Free Pool)

இவுங்களால கம்பெனிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, ஏதோ கம்பெனியே இவுங்கலாலதான் ஓடிட்டு இருக்குற மாதிரி அங்கயும் இங்கயும் போயிட்டு இருப்பாங்க. ஓவரா பேசிட்டு வேற இருப்பாங்க. எப்பவாவது புது ப்ராஜெக்ட்'க்குகோ, இல்ல ஓடிட்டு இருக்குற பழைய ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப தேவைப்படுவாங்க. இவுங்கக்கிட்ட ஒரு நல்ல பழக்கம் என்னன்னா, எந்த டீம்'ல போட்டாலும் வேல பார்ப்பாங்க. ஏதோ தாங்கள் தான் தங்களுக்கான டீம செலக்ட் பண்ற மாதிரி காட்டிகிட்டாலும், உண்மை அது இல்லைன்னு அவுங்களுக்கே தெரியும். யாருன்னு தெரியும்'ல, தோழரே?



ஜனநாயகம்'ங்கற பேர்ல கம்பெனி நடத்திட்டு இருக்குற இவுங்களுக்குத்தான், கம்பெனியோட பெருமளவு லாபம் போயி சேருரத, நாம எப்படி அநியாயம்னு சொல்ல முடியும்?

Related Posts



4 கருத்துக்கள்:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இது ஏறகனவே சரவணக்குமரன் எழுதியது.

ஷங்கர் Shankar on December 17, 2008 at 11:24 PM said...

thank you for ur information.

my friend sent this content by mail

Anonymous said...

சோ, ஞாநிங்க்ற பேரு வச்சிட்டு விமர்சனம் பண்ணுறேன்னு அதிகமா குத்தம் சொல்லிட்டே ....

As per my Knowledge ஞாநி is one of the great wirted and he won't afraid of anything..........

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009