Monday, December 29, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்கள் திமிர்பிடித்தவர்களா?


பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன. அப்போது இது குறித்து எந்த ஒரு ஐ,டி.(IT) பணியாளரும் அப்போது அக்கறைப்படவில்லை. தனது நலனே பெரிதெனக் கருதி கருமமே கண்ணாக இருந்து விட்டனர். இப்போது காலம் மாறி விட்டது. ஐ.டி. துறையின் தலைக்கு மேலே பணி நீக்கம் என்ற கத்தி தொங்குகின்றது. அன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே?) செய்தி வெளியிட்டது.

ஆங்கில மொழித்திறன் (English fluency) மற்றும் கல்வியறிவு ( Educational Qualification) காரணமாக "Out sourcing" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு (Software Engineer) கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன அந்த கம்பெனிகள். Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை (Official Language) "உத்தியோகபூர்வ" மொழியாக்கினர். (வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே English பேசினர்.) இந்த "ஆங்கிலப் பருப்பு" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் companyங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் பேச்சு வார்த்தை (conversation) நடக்கின்றது.

பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம் பற்றி அஞ்சத் தேவையில்லை. "உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்." என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க மலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் "சந்தை தேசியம்".
இந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். முதலில் தம்மை "கணிப்பொறி நிபுணர்கள்" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே விரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் சாப்ட்வேர் நிறுவனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, குறைவாக சம்பாதிக்கும் பிற ஊழியர்களிடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று (copyrights)காப்புரிமைப் பணம், (Annual royality)வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் நம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களை (வைத்திருப்பவர்களை) தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய "கணனிக் கண்மணிகளின்" கண் கண்ட தெய்வம்.

தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன. பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை? ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்பை பறிக்கிறோம், வறுமையை உருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா? நிச்சயமாக இருக்கும்.

இந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு சிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. "ஊழியர்களே! நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்!!" என்று எந்த (CEO) தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா? "சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது." என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.
கலாச்சார சீரழிவை தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரை வைத்துக் கொண்டு முழு ஐ.டி. துறையை களங்கப்படுத்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி சீரழிவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் "அப்பாவி பலியாடுகள்" என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்து இந்த சீரழிவு கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் தரகு வேலையை ஐ.டி. நிறுவனங்களின் மானேஜர்கள் செய்கின்றனர். கம்பெனி செலவில் நடக்கும் (Disco Party) இரவுக் களியாட்ட விழாக்களில், மது தாராளமாக பரிமாறப்படுகின்றது. இந்தக் கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்களுக்கு கிள்ளிப் போடும் தொகை, Disco Partyங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

இங்கே தான் ஐ.டி. கம்பெனிகளின் சுயரூபம் வெளிக்கின்றது. இந்திய கணிப்பொறி வல்லுனர்களின் உழைப்பை சுரண்டும் அதே நேரம், தாம் வழங்கும் அதிக சம்பளப் பணத்தை, (Retail Business) நுகர்பொருள் கலாச்சாரம் நோக்கி திருப்பி விடுகின்றனர். ஐ.டி. கம்பெனிகளின் வருகைக்கு பின்னர் தான் இந்திய நகரங்களில் Spencer, Big Bazaar, Pentaloons, McDonalds ஆடம்பரப்பொருட்களை விற்கும் கடைகள் (Multiplex,Malls)பெருகின. தீபாவளி, புதுவருடப் பிறப்புக்கு, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது போல ஐந்நூறு, ஆயிரம் ரூபா பெறுமதியான Gift voucherர்களை வருடாவருடம் கொடுக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட (உதாரணத்திற்கு இறக்குமதி ஆடைகளை விற்பனை செய்யும் Pentaloons, megamart, Westside, Raymonds) கடைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். அப்படியான கடைகள் இருப்பது தெரியாதவர்களுக்கு கூட அவற்றை அறிமுகப்படுத்துவதுடன், அதிகமாக நுகர்வதற்கு ஆசை காட்டப்படுகின்றது.

தமிழ் சாப்ட்வேர்களையும் இதே (Software Engineers) கணிப்பொறி நிபுணர்கள் உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. அதுகூட வியாபார நோக்கம் கருதித் தான் நடந்தது. தமிழ் மென்பொருள் வந்த பிறகு கணணி விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதையும், தமிழ் இணையத்தளங்களை பார்வையிடலாம் என அறிந்து ஆங்கிலம் தெரியாத ஆயிரக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றதை, நான் இங்கே புள்ளிவிபரங்களுடன் விளக்கத் தேவையில்லை. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அது. ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் கணணி பயன்படுத்தலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. கணனிக்கு ஆங்கிலம் தெரியாது, அது Codeகளை மட்டுமே புரிந்து கொள்ளும் என்ற அடிப்படை தொழில்நுட்பம் ஒருபுறம் இருக்கட்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பியிருந்தால் சீனாவிலும், ரஷ்யாவிலும் கடை விரிக்க முடியாது என்ற சந்தை நியதி தான் எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாத்தியமாக்குகின்றது. தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.

பங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது. அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு கணிப்பொறி நிபுணர்களை உருவாக்கும் கல்வியில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டன. அதற்குப் பதிலாக இந்தியாவில் ஐ.டி. படிப்பு முடித்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. தாமே மென்பொருட்களை தயாரிக்கக் கூடிய திறமை இருந்தும், தகுதியான உள்ளூர் நிபுணர்கள் இருந்தும், அதற்கான முயற்சியே எடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இந்திய கணிப்பொறி நிபுணர்களை தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், ஐ.டி. துறையில் இந்தியர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதல்ல. பொருளாதார ரீதியான திட்டமிடலே ஒரேயொரு காரணம்.

உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனம், தனக்கு தேவையான மென்பொருளை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது, அதற்கு பத்து கணிப்பொறி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கூட்டிப்பார்த்தால், இறுதியில் அந்த மென்பொருளின் செலவு அதிகமாக இருக்கும். சந்தையில் அதைவிட குறைந்த விலைக்கு, ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் கிடைக்கின்றது. யாரும் எங்கே மலிவானது கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள்? இந்திய கணிப்பொறி நிபுணர்களை தேர்ந்தெடுத்து , contract அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதால், இந்நாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள்(Consultancy) பயனடைகின்றன. குறிப்பிட்ட ஒரு நபரை பணியில் அமர்த்திக்கொள்ளும் நிறுவனம், அவரது சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவே Consultancy நிலையத்திற்கு கொடுக்கின்றது. இதனால் Consultancy Agencies அதிக வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க, தேவைப்படாவிட்டால் விரும்பிய நேரம் வேலையை விட்டு நிறுத்திவிடலாம் என்பது சாதகமாக பார்க்கப்படுகின்றது. இவ்வளவு பெரிய மோசடிகளுக்கு நடுவே பணிபுரிபவர்கள் நமது சாஃப்ட்வேர்இஞ்சினியர்கள்.

மற்றவர்கள் பார்வைக்கு கம்ப்யூட்டர் வல்லுனர்கள் அதிகமாக செலவு செய்பவர்கள், திமிர் பிடித்தவர்கள், தலைகால் தெரியாமல் ஆடுகிறவர்கள் போன்று மாயத்தோற்றம் தெரிந்தாலும் உண்மையில் நமது சாஃப்ட்வேர்இஞ்சினியர்கள் பெரும்பாலோனோர் நாட்டுக்கும், வீட்டுக்கும், சமுதாயத்திற்கும் பல நல்ல தொண்டுகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் இவர்கள் மேல் பொறாமை கொண்டு மற்றவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர்.

Related Posts19 கருத்துக்கள்:

ஷாஜி on December 29, 2008 at 4:37 PM said...

kadaisi "PARA"-wil ANDHAR PALTI aditha marmam enna?

Thangalum ennai ponra Software engineer'aa?

ஷங்கர் Shankar on December 29, 2008 at 4:56 PM said...

//Thangalum ennai ponra Software engineer'aa?//
இல்ல ஷாஜி!

சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்யும் துரோகத்தையும், நமது சாஃப்ட்வேர்இஞ்சினியர்கலுக்கு உள்ள பொறுப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும்!
யாரோ ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரையும் குற்றம் சொல்லக்கூடாது

Anonymous said...

Dear Shankar,

Am not sure, whom do you balaming and why..?

If IT not been developed for past decades, can you imagine the un-employment in India(COuntless)...Ofcourse, I agree all your blob blob story about bill gates and America..!!

Dont forget Dear Shankar... all are running behind Money, Including you BOSS...!!!

If you are comparing IT Guys with other employess, I can compare all with CINE Industry..Imagine I can write 1 book about all our Jealuosy....!!

Dont compare, Ultimate Objective is Money..Money !!!


You can creatd this blog also should have some purpose.. Agree?

Pelase stop spreading such a type of blogs...!! Iy you are really concern about you nation. There are lot of things to do. If you dont know..I'll redirect you as PURE INDIAN CITIZEN.

Sofware Engineers know their mental torture and why they are highly paid.

Atlast they have to pay their house rent and Income tax..and the year END..END... Nothing !!

-MSG

Anonymous said...

You got lot of your facts wrong.
1. Bill Gates donated almost 95% of his assets to Gates foundation.
2. Computers are not taking jobs; it actually improves productivity…
3. No one asking Indians to act western. India is currently acting like “US in 70s” . soon thing will settle down…
4. We need to thank that we are participating in world trade and economy. It moved hundreds and millions of people from poverty…

ஷங்கர் Shankar on December 30, 2008 at 8:47 AM said...

I accept the facts those you mentioned above my friends.

Unmai said...

Shankar, there is nothing wrong is getting more money as salary. every time some profession get some upper hand..in early 60s everyone liked to be part of indian services..and late 90s everyone in IT and we never what will be after 10 years..we cannot be jealouys with those folks if the make more money than us now. many people angry at IT becaue of jealous..let me ask you a question? if i sponsor visa to you to work in USA,do you say NO. so please stop writing this sort of blogs..many IT guys investing and spending all the mony in India and for their friends/family..so it's good that we get some financial freedom to achieve few things

Anonymous said...

I think you are not aware of the real story. If IT is the only business depending on US then why during slow down you are having much bigger problem with Automobile sector and textile sector. There are many other industry is dependent on export to other countries like US and Europe. Those days are all over and now all kind of business is depending on export to other countries.

IT people are getting media hype on the life style. But when you go to Spencer kind of places you can see many people who are not earning much like IT guys are spending money just like that and the reason is that the younger generation are having financial freedom bacause some how they are getting some job and earn good money. It is all after the IT & BPO Business boom in the last 10 to 15 years..so donot blame IT guys...it is all our sisters and brothers who get money easily and spending the same without any control. Family should educate them to have control.

ஷங்கர் Shankar on December 30, 2008 at 10:49 AM said...

Thanks unmai & anony

Anonymous said...

Hi,

While I agree to most of your points following are my comments:

1. While agreeing that IT culture has increased cost of living and consumerism in India, don't forget that this could have happened with any other sector (if it had created this much money).

2. If India refuses to participate in IT industry works, there are other countries like China who are willing to take up what we are doing now. Don't think that India is the ONLY low cost IT country. In fact China has already started taking up some of our works because of lower cost and higher productivity (this is my actual experience in IT industry). Apart from China, there are Philippines, Russia, Eastern European countries, Latin American countries ready to get the pie what India is currently enjoying. In another 10 years, you will notice other countries strongly competing with India in IT. You must be knowing that China has special English coaching classes for IT people in their country to facilitate this.

3. While I agree that US companies induce consumerism, as you correctly pointed out it is our IT folks who are not realizing this.

Anonymous said...

I read similar article on vinavu's blog like this about IT guys. These are hate mongering articles. Similar to what politicians do against particular caste or religion.

Just paint a group like this or that and make the general population hate them. Hitler did to Jews like this. I am not saying this is shankar's intention. But this article does that kind of job.

Blame IT guys for every thing. Prices are gone above blame IT Guys. Banks are falling. Blame IT guys. People are rude. Then he has to be IT guy. Big joke.

Spencers and Alsamall and so many complexes were in Chennai even before 1994. That time there was no IT boom in Chennai.

It is not that only Software is exported to other countries. What about Clothes, Food, Plastics, Chemicals, Castings etc. Nobody blames these guys are working for west. They also get paid less compared to what a person works in west(when you convert the money in rs and compare). Some of the items manufactured spoils Indian soil and air. Who cares that. Just blame IT guys. Only they are taking part in sins of their companies.

Even before IT boom TN government was making more money from Liquor sales. Coimbatore used to hold the No1 spot in Liquor Shop Auction. This was 15 years before. After IT same may be modernized to Pubs and bars.

There are inherent problems in every Industry people. Right now what I see as problem with the sofware engineers are: Most of them are young ad they are getting more money as starting salary, if there are no commitments, they are spending the money with out worrying about the future. They have to be conservative in spending. They have to realize the uncertainity of life.

Anonymous said...

Foreigh Direct Investment only determine the country growth. How India now in 2-nd fastest economic growing country, all are due to Indain IT companies got order from well-grew countries.
The one major thing I need to mention here. S/W engineer's are not good bargainers, so whatever, however 3rd persons selling/buying they don't hestitate to get. so automatically realestate, house rent are get increased.

ஷங்கர் Shankar on December 30, 2008 at 7:59 PM said...

// Spencers and Alsamall and so many complexes were in Chennai even before 1994. That time there was no IT boom in Chennai. //

Mr.Anonymous, After IT Boom (2000)Spencers and Alsamall retails sales increased well comparing to previous statistics. And people buying capacity also increased last 4 years. because of IT Peoples & World Market Strategies.
And one thing, in chennai, bangalore, hyderabad past 5 years only they constructed huge malls & SuperMarkets. who is the inspiration for this.

ஷங்கர் Shankar on December 30, 2008 at 8:09 PM said...

/// S/W engineer's are not good bargainers, so whatever, however 3rd persons selling/buying they don't hesitate to get. so automatically real estate, house rent are get increased. ///

yes. the real estate industry indirectly pointing out the IT Boom. Now the IT industry is going down(layoffs) the real estate share values also going down. In Chennai for example, last year the house rent is Rs.8,000, but now the same house for Rs.6,000 to Rs.7,000.

Anonymous said...

Ennapa ithu ippadi adichikaringa; "Vaalkaiyae poarkalam, vaalnthu thaan paakanum". So we have to live; if possible try to give some usefull ideas & suggestions to earn money.

ASP on January 3, 2009 at 11:52 PM said...

Shankar..go back 10 to 15 years..before globalisation..have to stand in line for kerosene , Have to wait 6 months for GAS connection.. One house will have telephone in the whole street... Have to go to bank and wait for 1/2 hour to width draw 500 Rs.. think now ..I don't have to say... every one has a cell now...

If we would have thought 15 years ago...that we have to retain manual labor, close our doors to world..and all Indians should work only to India.. we will still in that same old India. IT is just used the globalisation in effective way...
Come out of your local village market..now world is your market..jump into it and earn and grow along with the world... ( I hope you know how to make use of this globalisation since i can see Ads in your blog)...
Don't blame IT ...IT brought out India to world..and world to Indians.. Make use of it..Don't waste time in blaming others..
Earlier only few business man and politicians were enjoying ..now IT brought it your neighbours..don't envy on it..
Now I'm really happy to see middle class people spending malls and theatres..and enjoying life...ultimately..we need out people happy..
You should actually thank all the parents who sacrificed all their life made all the their kids a graduate and to some leaders like Kamarajar who made schooling a compulsory...these are the foundation stones..for world to recognise India as talent pool...lets make use of it..
we can talk all day but all I want to say is don;t try to put break on our growth..try to help it.. we have more task than these blaminga..to bring India as a developed country...

ஷங்கர் Shankar on January 4, 2009 at 12:11 AM said...

ok ASP.

Ramprasad said...

Well this is called CAPITALISM. If you don't like it take a government job

குடுகுடுப்பை on January 23, 2009 at 2:58 AM said...

முதலாளித்துவம் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லாது.இது ஜனநாயகம் ஊழலகள் இருக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன்னேறும்.மற்ற இசங்கள் சி நூற்றாண்டுகளாக எந்த தீர்வை தந்திருக்கிறது

Anonymous said...

matrum oru it ethirpu pathivu. Intha murai iruthiyil arasiyal katchi pol oru baldi..

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009