கடந்த அதிமுக அரசை விட தற்போது ஆட்சி நடத்தும் திமுக அரசு சாதனைகளை மட்டுமே செய்து வருகிறது.. என்கிறார்கள் திமுகவினரும், திமுக தலைவர்களூம், சரி என்று யோசித்து பொதுமக்களில் ஓருவனாகிய நான் அவரின் சாதனைகளை பட்டியலிட முயல்கிறேன்.
1 ஓரு ரூபாய்க்கு அரிசி
நிச்சயமாய் இது ஓரு சாதனைதான்.. அதிலும் நல்ல குவாலிடி அரிசி கொடுக்கிறார்கள். அதற்காக 25 ரூபாய் கொடுத்து வாங்கும் அரிசியை கம்பேர் செய்ய கூடாது.. நான் உபயோகிக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இதனால் எதிர்கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது நிச்சயமாய் திமுக அரசின் சாதனையே..
2. இலவச டிவி
இதுவும் நிச்சயமாய் சாதனையே.. நல்லதோ கெட்டதோ.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறார் கலைஞர். என்ன டிவியை வாங்கி 1500 முதல் 2000 வரை வாங்கிய சூட்டோடு விற்கபடுகிறது. இப்படி விற்கப்படுவதால் அதிகம் பலனடைந்தவர்கள் மேன்ச்னில் வசிக்கும் இளைஞர்கள். ஆளுக்கு 400-500 போட்டால் ஒரு கலர்டிவி கிடைத்துவிடுவதால்..
3 ரேசனில் சமையல் பொருட்கள்
இதுவும் நல்ல முயற்சியே..அதிலும் விஜயகாந்த் போன்ற சிறு தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் குறைந்த விலையில் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
பாராட்ட பட வேண்டிய விஷயம்.
4 டாஸ்மாக்
சென்ற ஆட்சியினால் தற்போதைய அரசுக்கு வைத்த ஆப்பு.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருப்பதால். தலைவர் ஆட்சிக்கு வந்தும் அதை தனியார் வசம் எடுக்க முடியவில்லை.. இந்த விஷயத்தில் தலைவருக்கு தோல்வியே என்றாலும். அரசுக்கு மிகப் பெரிய வருமானம் இதிலிருந்து தான் வருகிறது.
என்ன சென்ற ஆட்சியில் பாட்டிலில் போட்டிருக்கும் விலைக்கே வாங்கினோம்.. இப்போது எல்லாம் அவர்கள் சொல்கிற விலையில் வாங்க வேண்டியிருக்குது. எதாவது கேட்டால், உன்னால முடிஞ்சத பாத்துக்க என்கிறார்கள். அந்த அளவுக்கு தான் தமிழக அரசின் சட்டம்.. எல்லாம் கட்டிங் செயல்..
5 மக்கள் சேவையில் துரிதம்
ஆம் சன் டிவிக்கு இவர்களுக்கும் பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு தங்கள் அரசின் செய்திகள் இருட்டடிப்பு செய்ய பட்டுவிடும் என்கிற காரணத்தால்.. மக்கள் சேவைக்காக ஆரம்பிக்க பட்ட கலைஞர் டிவி ஓரே வருடத்தி இரண்டாவது இடத்தை பிடிக்க, இதை மக்கள் சேவையில் துரிதம் என்பதை விட எப்படி சொல்வதாம்?
6 தமிழில் பேர் வைத்தால் வரிவிலக்கு
இப்படி பட்ட சலுகைகளை அறிவித்து.. தமிழிலேயே விளக்கம் சொன்னால்தான் அர்த்தம் தெரியும் பெயர்களை வைத்து இம்சை செய்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபமே தவிர அரசுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை.. இதனால் நஷ்டம் அடைந்தது.. யாரென்றால் கமர்சியல் டேக்ஸ் ஆபிசர்ஸ்கள்தான். பின்னே வாரத்துக்கு நாலாயிரமும், ஸ்பெஷல கட்டிங் 2500 யாருக்கு லாஸ்..
7 சினிமா தியேட்டர்களில் குறைந்த அனுமதி கட்டணம்.
சினிமா தியேட்டரிகளில் மல்டிப்ளக்ஸ் எனப்படும் தியேட்டர்களில் அதிக பட்டமாய் 120க்கும், மற்ற தியேட்டர்க்ளில் அதிகப்படியாய் 50 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று அரசின் சட்டம் சொல்கிறது.. ஆனால் சிங்களில் தியேட்டர்களில் கூட புது படத்துக்கு குறைந்த பட்சம்..70 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கிடையாது.
8 சட்டம் ஓழுங்கு..
அது மிக சரியாய் இயங்குவதாய் சொல்கிறார்கள். மேலே சொன்ன டாஸ்மாக் கடை ஆட்கள் தன் உதாரணம்.. அரசியல்வாதிகளின் ஆதரவில் பல கடைகளில் பார் நடத்துவதால், மேலே கேட்டால் ரவுடியிசமும், அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை.. ஆனாலும் சென்னையில் ச்ட்டம் ஓழுங்கு மிக அருமையாய் இருக்கிறது.
9 தொடர் மின்வெட்டு
இதற்கும் அரசுக்கும் பெரிய சம்மந்தமில்லை.. ஏனென்றால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகமாய் மின்வெட்டு இருப்பதால்.. அவர்களை விட சத்விகித முறையில் நம் கழக் ஆட்சியில் குறைவாகவே மின்வெட்டு என்பதே உண்மை
10 ரவுண்டாய் செட்டில்மெண்ட்
பேரன்கள் ரவுண்டாய் கொடுக்காத காரணத்தினால், தன் பிள்ளையை வைத்து ஓரு ஆட்டம் ஆடி வாங்க வேண்டியதை ரவுண்டாய் வாங்கி விட்ட காரணத்தினால்.. தலைவரின் அடுத்த வேளை சோத்துக்கு பஞ்சம் வராது என்பதே இன்னுமொரு அருமையான விஷயம்.
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments