செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று மோகன் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:
- புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
- தீபாவளி பண்டிகைக்கு 100 ருபாய் மதிப்புள்ள பட்டாசு, 100 ருபாய் மதிப்புள்ள இனிப்பு இலவசமாகத் தரலாம்.
- தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
- அக்ஷய த்ரிதை நாளன்று 0.0000001 கிராம் தங்கக் காசு இலவசமாகத் தரலாம்.
- விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- புனித வெள்ளியன்று கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- ஆயுத பூஜை நாளன்று பொறி மற்றும் இன்ன பிற பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
- குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம்.
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments