Saturday, December 27, 2008

போருக்கு உலக நாடுகள் ஆதரவு




மும்பை தீவிரவாத செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும், இந்தியாவில் வெறிச்செயல் நிகழ்த்திய தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்திருந்த ஒரு மாத கெடு முடிந்தது.

ஆனால் பாகிஸ்தானோ பல சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறது. இந்நிலையில். தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ராணுவம் குவிப்பு

எல்லையோரப் பகுதிகளில் முப் படைகளையும் குவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானும், தன் எல் லைப் பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தானுடன் போர் மூளுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியப் படைகள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி விரைந்துவிட்டன. விமானங்களும், போர்க் கப்பல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் முக்கியப் பகுதிகளிலும் பாகிஸ்தான் படைகள் பெருமளவு குவிக்கப்பட்டு வருவதாக ராய்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. இதனை அமெரிக்க உளவுப் பிரிவும் இந்திய உளவுத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய விமானங்கள், நேற்று முன்தினம் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

"போர் வாய்ப்பு இல்லை'

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் ராணுவம் செய்து வருகிறது.இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லாகூர் மற்றும் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ராணுவ விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு பாகிஸ்தானின், "டெய்லி டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது."போர் நடப்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை' என இரு நாட்டு பிரதமர்களும் கூறி வருகின்றனர். இருந்தாலும், எல்லையில் தொடர்ந்து இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருவதாலும், பிரதமர் மன்மோகன் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளுக்கு தகவல் தெரிவித்த பிரதமர்!

இந்நிலையில் தங்கள் கோரிக்கை எதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை என்பதை உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது இந்திய அரசு.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவுக்குச் சொந்தமான, ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் விமானத் தாக்குதல் நடத்தக்கூடும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் ஆதரவு

தனது பிராந்தியத்தையும், இறையாண்மையையும் காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் தீவிரவாதிகள் முகாம்கள் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதன் குறுக்கே நாங்கள் வர மாட்டோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நிலைப்பாட்டை இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இந்தியாவுக்கு எந்த வடிவிலும் உதவ தயார் என ரஷ்யாவும் உறுதியளித்துள்ளது.

நன்றி - தினமலர்

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009