Saturday, December 20, 2008

எந்திரன் கதை - 1




நன்றி -- என்வழி.காம் , குங்குமம்

வி
ஞ்ஞானியான ரஜினி, தன் அரிய கண்டுபிடிப்பால் எந்திரனை உருவாக்குகிறார்.

அந்த எந்திரன் தோற்றத்தில் இன்னொரு ரஜினியாக இருக்கிறது.

மொழியைப் படிக்கவும், பேசவும் மற்ற மனிதர்களைப் போலவே இயங்கக்கூடிய விதத்தில் பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளித்தாலும் அந்த எந்திரனுக்குள், கம்ப்யூட்டர் மூளை செயல்படுவதால்… மனித சக்திக்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பலவும் எந்திரனுக்கு இருக்கின்றன.

எந்திரனின் தோற்றம் மற்ற மனிதர்களுடன் ஒத்திருக்கிறதா, இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க விரும்பும் விஞ்ஞானி, அதைக் கூட்டிக் கொண்டு தான் வழக்கமாக முடி திருத்திக் கொள்ளும் சலூனுக்குப் போகிறார்.

உள்ளே போனதும், அங்கிருக்கும் முடி திருத்தும் கலைஞர்கள் எல்லோரும் ரஜினியுடன் இன்னொரு ரஜினியும் வருவதாப் பார்த்து அதிசயப்படுகிறார்கள்.

அதில் ஒருவர் விஞ்ஞானி ரஜினியிடம், ‘யார் இவர்… உங்களைப் போலவே இருக்காரே?’ என்று கேட்க, அதற்கு, இவர் என்கூட பிறந்தவர்…!” என்கிறார் விஞ்ஞானி ரஜினி.

கூடப் பிறந்தவன்னா, ‘இதுவரைக்கும் இவரை இங்கு கூட்டிக்கிட்டே வந்ததில்லையே…!” என்று பதிலுக்கு அவர் கேட்க, “இவர் நேத்துதானே பிறந்தார்…!!” என்று ரஜினி பதில் சொல்லி, பிறகு சமாளிக்கிறாராம்.

சலூனில், உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில், எந்திரன் ரஜினி படிக்க புத்தகம் கேட்க, அவரிடம் கொடுக்கப்படும் புத்தகங்கள் அத்தனையையும் உடனுக்குடன் படித்துக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகம் கேட்பாராம் எந்திரன் ரஜினி.

இந்த தொல்லை தாங்காத சலூன்காரர், 300 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு புத்தகத்தைக் கொடுக்க, அதையும் சில நிமிடங்களில் மண்டையில் ஏற்றிக் கொள்வாராம் எந்திரன்.

எதையும் படிக்காமல், சும்மா ஒப்புக்குத்தான் அவர் விளையாடுகிறார் என்று நினைத்த சலூன்காரர், எந்திரனிடம், அந்தப் புத்தகத்தில் அவர் படித்ததைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, இன்ன புத்தக்த்தில் இத்தனாம் பக்கத்தில் இந்த விஷயம் எழுதப்பட்டிருக்கிறது என்று, இதுவரை படித்ததையெல்லாம் எந்திரன் புட்டுப்புட்டு வைக்க, அதிர்ச்சியில் மயக்கம் போடாத குறையாக அங்கிருந்து விரைகிறாராம் சலூன்காரர்… நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருப்பார் இது அத்தனைக்கும் காரணகர்த்தாவான விஞ்ஞானி ரஜினி.

-இது எந்திரனில் இடம்பெறும் ஒரு காட்சி.

இதை நாம் லீக் செய்யவில்லை. எந்திரன் தயாரிப்பாளர்களே வெளியிட்டிருக்கும் காட்சி மற்றும் படங்கள் இவை. வெளிவந்த இதழ் குங்குமம்!!

இதையும் பாருங்க -- எந்திரன் புதிய படங்கள்

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009