Tuesday, December 09, 2008

ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்யவேண்டியது..


என்னுடைய நண்பர் ஒருவர் பின்வரும் தகவலை இமெயிலில் அனுப்பியிருந்தார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!!!!

குஜராத் நிலநடுக்கும், சுனாமியின் தாக்குதல், இப்போது மும்பாய் தீவரவாதிகளின் தாக்குதல் என்று நாம் எதிர்பார்க்காத எத்தனையோ இழப்புகள். இதில் குழந்தைகள் அதிகமாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தங்களை இழந்த கொடுமைகள். யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையில் தான் ஒவ்வொருவரும் இப்போது இருக்கிறோம்.

நாம் நம் குழந்தைகளுக்கும், நம்மை நம்பி உள்ளவர்களுக்கும் என்ன செய்து வைத்து இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லிவையுங்கள்.

1. உங்களின் சேமிப்புகள், அதன் முழுவிபரம், சேமிக்கு கணக்கின் நம்பர்.(Savings Account No)
2. உங்களின், உங்களின் குடும்ப உறுப்பினர்களின் இன்சூரன்ஸ் பாலிஸி பற்றிய முழு விவரங்கள்(Full Details of Insurance)
3. நிலம், வீட்டின் பத்திரங்கள், அதன் கணக்கு வழக்குகள், விபரங்கள்(All Documents Of house & properties)
4. வீட்டிற்காக எடுத்த இயற்கை அழிவுகள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் தகவல்கள் (Fire, earthquake etc), தனி நபர் விபத்து பாலிஸிகள்
5. நகைகள், உடைமைகள், வாகனங்கள் பற்றிய விவரங்கள்(Jewels, Value Added Items & Vehicle Information)
6. EPF பற்றிய தகவல்கள்
7. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கடன் பற்றிய தகவல்கள்(Externel Credits)
8. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அந்த விபரங்கங்கள்

மேற்கொண்ட முழுவிவரங்களை தெளிவாக எழுதி உங்களின் நெருங்கிய சொந்தம் குறைந்தபட்சம் இரண்டு நபரிடமாவது கொடுத்துவையுங்கள், நெருங்கிய நண்பர்களிடம் ஒரு காப்பி(xerox copy) கொடுத்துவையுங்கள். வீட்டில் மனைவி குழந்தைகளிடம் விபரமாக எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி அவர்களுக்கும் ஒரு காப்பி கொடுத்து வையுங்கள்.

அவ்வபோது இதனை அப்டேட் செய்யுங்கள், அப்டேட் செய்யும் போது எல்லாம் மறக்காமல் மற்றவர்களிடம் கொடுத்துவையுங்கள்.

என் பக்கத்து வீட்டு நண்பர் வீட்டின் எல்லா சாவிகளையும் கூட அவரின் சொந்த ஊரில் ஒரு செட் செய்து வைத்துள்ளார்... சில விஷயங்கள் நமக்கு funny ஆக இருக்கும் ஆனால் அதன் பலன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தெரியும்.

எங்களது பக்கத்து வீட்டில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து அதில் குடும்பதலைவர் மரணமடைந்தார். அவரின் சாதாரண பேங்க் அக்கவுண்ட் நம்பர் தெரியாமல், பேங்க், இன்சூரன்ஸ் டாகுமன்ட் எங்கு வைத்து இருக்கிறார் என்று தெரியாமல் அவர் மனைவி பட்டப்பாடு அவருக்கு மட்டுமே தெரியும். இதில் இது கூட தெரியாம இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்கா பாரு!! என்ற ஊர் பேச்சு வேறு...........

இதுவரை இவற்றை செய்யாதவர்கள் இனி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

- ஷங்கர்

Related Posts



1 கருத்துக்கள்:

abusamim on December 9, 2008 at 2:48 PM said...

ஒவ்வொவ்வரும் கண்டிப்பாக செய்யவேண்டியது. ஆக்கபூர்வமாக யொசனை அருமை பாராட்டுகள், வாழ்த்துகள். அபுசமிம்-ஜித்தா,சவுதி.abusamim45@gmail.com

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009