Tuesday, December 02, 2008

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.


Subject : கோபாலபுரவியல்

நேரம்:3.00 மணி
மதிப்பெண்:100
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

A.சிறுவினாக்கள்:

1. சன் டி.வி மீண்டும் அறிவாலயம் வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக.(10 mark)

2. கலைஞர் டி.விக்கு இதுவரை படங்களை வாங்கித்தந்த இராம.நாராயணன் இனி எந்த டி.விக்கு படங்களை வாங்கித்தருவார்? (10 mark)

3. வைகோ,விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா போன்றவர்களை ஆதரித்த சன் டி.வி இனி யாரை ஆதரிக்கும்? (10 mark)

4. கனிமொழி மற்றும் தயாநிதியிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா ? (10 mark)

5. அழகிரி மற்றும் தயாநிதி ஆகியோரின் திரைப்பட நிறுவனங்கள்,கேபிள் நிறுவனங்கள் இணையுமா ? (10 மார்க்)

6. சன் டிவி Top Ten Movies ல் வாரணம் ஆயிரம் இடம் பெறுமா ?

B.விரிவான விடையளிக்கவும்:

1. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? (25 mark)

2. தினகரன் அலுவலகம் எரிப்பு என்றால் என்ன? (25 mark)


இந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை பிநூட்டடில் அளிக்கவும்
கீழ்கண்ட செய்திக்கு அண்ணன் கேபிள்ஷங்கருக்கு நன்றிகள் - cablesankar.blogspot.com

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின்பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?

ராஜ்டிவி.

இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ்அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களதுநிலமை என்னவாகும்?

கலைஞர் தொலைக்காட்சி

சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத்ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்தஇடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்றுசேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியைதூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய்ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.

ஹாத்வே

பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள்அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெஅரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால்அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல்இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும்வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?

ஆர்.சி.வி

மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ளஎல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்ஷன்கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனிஆர்.சி.வியின் கதி..?

அரசு கேபிள் கார்பரேஷன்

நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்டகார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில்அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாககொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதிஎன்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.

ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?

கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.

அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு..
ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம்அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது..
இதை
நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள்சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்துகொண்டுதானிருக்கிறார்கள்..


இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்கபோகிறதோ..?

வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களைமுடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரதுபேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்னசெய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்குரவுண்டாய்கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள்என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின்பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?

Related Posts6 கருத்துக்கள்:

bupesh said...

kalakitinga thalaivare..good writing..

Anonymous said...

நாமக்கு அப்பு

கார்த்திகேயன் said...

இதெல்லாம் அரசியலில் சாதரனம்ப!!!!!!!!!!!!!!!!!!!!!

Rangs on December 30, 2008 at 11:15 AM said...

A. 70%

B. Rendu TVkkum Vaangi tharuvaan

C.Avangalai Ellam Deal la vittuttu...only DMK vai thookki pudikkum..

Adap ponga Sir..
pinnoottam koodap poda mudiyala..romba veruppaa varudhu...
Thamil naattai kaapaath yarume illai..
Indha ulagathulaye...muttap pasanga...paavap patta jenmanga nammathan...


Romba kaduppulayum...nondhu poyum idhai solrenga...

ஷங்கர் Shankar on December 30, 2008 at 11:20 AM said...

உங்க ஆதங்கம் புரியுது Rangs

ஷங்கர் Shankar on December 30, 2008 at 11:22 AM said...

// pinnoottam koodap poda mudiyala..romba veruppaa varudhu...
Thamil naattai kaapaath yarume illai..
Indha ulagathulaye...muttap pasanga...paavap patta jenmanga nammathan... //

இன்னும் மூணு வருஷத்திற்கு அப்படித்தான் நண்பரே!

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009